80.
நட்பாராய்தல்
திருக்குறள் -சிறப்புரை :791
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நாடாள் பவர்க்கு. --- ௭௯௧
( நட்பாராய்தல்- நட்பு ஆராய்தல்; கேடில்லை – கேடு இல்லை; வீடில்லை- வீடு
இல்லை; நட்பாள்பவர்க்கு- நட்பு ஆள்பவர்க்கு.)
நட்பை விரும்பி ஒருவரோடு நட்புக் கொண்டபின், நட்பை முறித்துக்கொள்வது
என்பது இயலாத செயலாகும். எனவே ஆராயாமல் நட்புக்கொள்வது போலக் கேடு தருவது வேறு ஒன்றுமில்லை.
“….. … …. ..பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர்
திறத்தே.” –நற்றிணை.
அறிவுடையோர், ஆராய்ந்து பார்த்தே நட்புக் கொள்வர் ; நட்புக்கொண்ட பின்பு
ஆராய்ந்து பாரார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக