திருக்குறள்-
சிறப்புரை : 786
முகநக நட்பது
நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது
நட்பு.
--- ௭௮௬
உள்ளுணர்வு இல்லாது முகத்தளவில்
ஒருவருக்கொருவர் புன்முறுவல் காட்டிச் செல்வது நட்பன்று; உள்ளத்தில் உண்மையான அன்போடு மனம் குளிர நட்புப் பாராட்டுவதே நட்பு ஆகும்.
எந்தை
வாழி ஆதனுங்க என்
நெஞ்சம்
திறப்போர் நிற் காண்குவரே.” –புறநானூறு.
ஆதனுங்க..! என் நெஞ்சைத் திறப்போர், நின்னைக் காண்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக