திருக்குறள்-
சிறப்புரை : 785
புணர்ச்சி பழகுதல்
வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை
தரும்.--- ௭௮௫
ஒருவருக்கு ஒருவர் நெருங்கிப் பழகிப் புரிந்துகொண்டுதான் நட்புக்கொள்ள
வேண்டும் என்றில்லை ; இருவரும் மனத்தால் ஒன்றினாலே, நட்பாகிய உரிமையைக் கொடுக்குமே.
உள்ளத்தால் ஒன்றினார் நட்பு…!
“பிசிரோன்
என்ப என் உயிர் ஓம்புநனே
செல்வக்
காலை நிற்பினும்
அல்லற்
காலை நில்லலன் மன்னே.” –புறநானூறு.
பிசிரோன்(பிசிராந்தையார்) என் உயிர் காக்கும் தோழன்,அவன் என்னிடத்தில்
செல்வம் உள்ளபோது வாராமல் இருந்தாலும் யான் துன்புறுங் காலத்தே கட்டாயம் வருவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக