திருக்குறள்-
சிறப்புரை : 789
நட்பிற்கு வீற்றிருக்கை
யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய்
ஊன்றும் நிலை.—௭௮௯
நட்பு வீற்றிருக்கும் இடம் யாதென்றால் (மனமே) மாறுபாடு இல்லாமல் ஒரே நிலைத்தாகி இடம், பொருள்,
ஏவல் பாராது, உதவி வேண்டிய இடங்களில் எல்லாம் தயங்காது தாங்கி நிற்கும் தன்மையேயாம்.
“இம்மை
போலக் காட்டி உம்மை
இடையில்
காட்சி நின்னொடு
உடன்
உறைவு ஆக்குக உயர்ந்த பாலே.”—புறநானூறு.
பாரியே..! இப்பிறப்பின்கண் நீயும் நானும் நட்புடன் இன்புற்று இருந்தவாறு
போல, மறுபிறப்பிலும் கண் முன்னே இடைவிடாது தோன்றும் நின் காட்சியோடு கூடி வாழ்தலை உயர்ந்த
ஊழ் கூட்டுவதாகுக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக