திருக்குறள்-
சிறப்புரை : 790
இனையர் இவரெமக்கு
இன்னம்யாம் என்று
புனையினும்
புல்லென்னும் நட்பு.---- ௭௯0
(இவரெமக்கு- இவர் எமக்கு)
இவர் எமக்கு இத்தகைய அன்புடையவர் ; யாம் இவருக்கு இத்தகைய அன்பினர் என்று
நட்பினைப் புனைந்து பேசிக்கொண்டாலும் நட்புச் சிறுமை உடையதாகிவிடும்.
“
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்
சேண் நீங்கிய வாய் நட்பினையே.” – மதுரைக்காஞ்சி.
ஒரு பொய் கூறுவதால் உயர்ந்த உலகம் அமிழ்தொடு கிடைப்பினும் அதனை விட்டொழித்து,
வாய்மையுடன் நட்புச் செய்தலை உடையவன் நெடுஞ்செழியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக