சனி, 6 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 13


தொல்தமிழர் அறிவியல் – 13

1.அறிவியல் என்றால் என்ன….?

                       அறிவியலின் அடிப்படைஇயற்கையின் இருப்பையும் இயக்கத்தையும் அறிவதே. தமிழரின் அறிவியல் அறிவு இயற்கையை (இருப்பை)அறிதல் இயற்கையோடு இயைந்து(இயக்கத்தை) வாழ்தல். இவ்வகையில் மனித இனத்தின் நேரிய வாழ்வை நெறிப்படுத்தினர். இஃது தமிழரின் அகவாழ்க்கையை அறிவியல் படுத்தியது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது புறவாழ்க்கையைச் செம்மைப்படுத்துகின்றன.                                     

             வானூர்தியும் கணினியும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம் ; உண்மையும் ஒழுக்கமும் இல்லாமல் மனிதனாக வாழ முடியாது. அறிவியலற்ற அகவாழ்க்கை அமைதியற்ற சமுதாயத்தை உருவாக்கும். உலகின் இன்றைய நிலையை உற்றுநோக்குங்கள்- மனநோயாளிகள் கையில் மனிதம் அழிக்கும் நவீன ஆயுதங்கள். “” Arts without science  - useless ; Science without arts -- dangerous .”” ---        
                ”’ புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் முந்தைய கண்டுபிடிப்புகளிடம் மன்னிப்புக் கோரி நிற்கின்றன”” என்ற கூற்றிற்கிணங்க அறிவியல் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத் தான் திருவள்ளுவர்அறிதோறு அறியாமை கண்டற்றால் (1110) என்று வளரும் அறிவு முதிர்ச்சி அறிவியலின் வளர்ச்சியாவதைக் குறிப்பிடுகின்றார்.
                             “ Refer the couplet number 355 from Thirukkural, an outstanding ethical treatise in Tamil. In a cursory glance, the poem may seem to give a mere definition for knowledge ‘Arivu’ in Tamil. It one probes into the poem he wiil be able to understand that it embraces not only the concept such as knowledge  but also science, truth, idea and news.
 In the word ‘Science’ is defined as a branch of knowledge dealing with substances, living and non-living things, it is exactly the Kural quoted above says. Hence it is to be remembered that science was not alien to the ancient Tamils. They were  very well aware of what science is and what are its characteristics.” –Editor.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக