சனி, 20 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் - 27

தொல்தமிழர் அறிவியல் - 27

5. புல், மரம்

பறவைகள் குறித்து ஆராய்ந்த தொல்காப்பியர் தாவரவியல் ஆய்வில்
புல் வகை - மரவகைகளையும் ஆராய்ந்துள்ளார்.
புல்வகை: உறுப்புகள்
தோடே மடலே ஓலை என்றா
ஏடே இதழே பாளை என்றா
ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்
-தொல்.1586.
                  இலை. பனை மடல். தென்னை ஓலை என வருவன போலசொல் மரபுகள் பல உலக வழக்கில் உள. இவை மற்ற இயலாதன. உள் வயிரம் இல்லாத பனை தென்னை அனைய புல் இன வகைகளின் உறுப்புக்கள் வழங்கப்படும் மரபுமுறை : தோடு. மடல். ஓலை .ஏடு. இதழ் பாளை ஈர்க்கு. குலைஇவ்வாறு வருவன பிறவும் உள. தொல்காப்பியர் பிறவும் உள என்று கூறுவதுஇச்செய்திகளை மேலும் நுண்ணிதின் ஆராயந்து அறிக என்பதற்காம்.
மர வகை: உறுப்புகள்
இலையே முறியே தளிரே கோடே
சினையே குழையே பூவே அரும்பே
நனையுள் ளுறுத்த அனையவை எல்லாம்
மரனொடு வரூஉம் கிளவி என்ப.
-தொல். 1587.
                 மரவகை உள் வயிரம் உடையவை. உள்ளும் புறமும் திண்மையானவை. அவற்றின் உறுப்புக்கள்இலை. முறி. தளிர். கோடு. சினை. குழை. பூ. அரும்புநனை இவை உள்ளிட்ட இவை போன்ற அனைத்தும் . ( கிளவி- சொல் ; முறிமுற்றாத இலை ; நனைமொக்கு ; குழை- கொழுந்து.)
புல்மரம்: பொதுப் பெயர்கள்
காயே பழமே தோலே செதிளே
வீழோடு என்றாங்கு அவையும் அன்ன.
-தொல். 1588.
காய். பழம். தோல். செதிள். வீழ் ( விழுது) இவை இரண்டுக்கும் பொதுவாய் வழங்குவன.
புறக் காழனவே புல் என மொழிப
அகக் காழனவே மரம் என மொழிப.
-தொல். 1585.
                      தொல்காப்பியர் மரபியலில் கூறும் உயிரியல் தொடர்பான கருத்துக்கள்அகக் காழனவே மரமெனப் படுமே. புறக் காழனவே புல்லெனப் படுமே .” போன்றவையும் கபிலர் குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்களைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளதும் ஆன்றோர்தம் அறிவியல் சிந்தனைக்குச் சான்றன்றோ..!
அறிவியல் ஆசான் தொல்காப்பியர் ஓரறிவு உயிர்களைப்(புல். மரம்.) பகுத்து ஆராய்ந்த முறை இன்றைய அறிவியலுக்கு முன்னோடியாக அமைந்துள்ளதை அறிக

Characteristics of Trees
                     First, trees and shrubs are plants that have woody growth. Many people, for example, think that banana trees are trees, but in fact, they are not; they are considered to be the world's largest herb.------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக