திங்கள், 29 ஜூலை, 2019

தொல்தமிழர் அறிவியல் – 36: 8. மனநலம்


தொல்தமிழர் அறிவியல் – 36: 8. மனநலம்

அவை :-
 இத் (Id) -  இன்பக்கொள்கை (Pleasure Principle)
ஈகோ (Ego) - நடைமுறைக் கொள்கை ( Reality Principle ) 
சூப்பர் ஈகோ – Super Ego) நீதிக்கொள்கை ( Moral Principle)
என்பனவாம்.
இம்மூன்று பகுதிகளும் சரிவர இயங்கினால்தான் மனிதன் முழுமை பெறுகிறான். ஒரு முழுமையான மனிதனை உருவாக்கவே திருவள்ளுவர் . அறத்துப்பால் முழுதும் மனநலம் குறித்து ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றார்.
மேலை நாட்டுச் சிந்தனையாளர்கள்
                      மேலை நாட்டில் பகுத்தறிவியல் (Rationalism) பட்டறிவியல் ( Empiricism) என்ற இரண்டு வகையான சிந்தனை இயக்கங்கள் தோன்றின. பகுத்தறிவியல்வாதிகள் பகுத்தறிவுக்குட்படாத எதுவும் அறிவாகாது என்னும் கருத்துடையோராவர்.
                      சிந்தனை அறிவே சிறந்தது என்று கூறும் தெகார்த்தே ( Rene Descortes 1596 – 1650) அனுபவம் பொய்த்திட வாய்ப்புண்டு என்று கருதுகிறார். மனமே அறிவுக்கு அடிப்படை என்பது இவரது முடிபு . மனத்தின் இயக்கமாகிய சிந்தனையே அனைத்திற்கும் அடிப்படை என்று கூறும் இவர்  மனநிலையை இரு கூறாகப் பகுத்துக் கூறுவார்.
1.   உடனுறை கருத்து ( பிறக்கும்போதே மனத்தில் பதிவதுகடவுள் பற்றிய எண்ணம் போல.)
2.   வந்தேறும் கருத்து ( மனத்தால் உருவாக்கப்படுவது )

                          தெகார்த்தே    கருத்துக்களை மறுத்துக்கூறும் ஜான்லாக் (John Locke: 1632- 1704 )   பகுத்தறிவியத்தின் பிறப்பிலுறை கொள்கையை முற்றிலுமாக மறுத்தார். பிறக்கும்போதே எல்லோர் மனத்திலும் எண்ணங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கடவுள் என்பது பிறப்பிலுறை எண்ணமன்று; பிறப்பிலுறை எண்ணங்களே அறிவாகும் என்றால் அனுபவமும் கல்வியும் பயனற்றதாகிவிடும் என்றார். புலன்களின் வழியாகவே மனத்தில் எண்ணங்கள் உருவாகின்றன, அனுபவமே அறிவின் ஊற்று என்பது இவர் முடிபு.
                           பட்டறிவினால் மனம் பக்குவப்படுகிறது என்பதை நிக்கோலா மாக்கியவெல்லி  ( Nicola Machiavelli : 1467 – 1527 )  மனித மனம் எதில்தான் நிறைவைப் பெறுகின்றது.  கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன், துன்பங்களைச் சுவைத்துக்கொண்டே இருந்தாலும் கடந்தகாலத் துன்பம் சிறிதென நினைக்கும் அளவுக்குத் துன்பங்கள் தொடர்கின்றன, என்கிறார்.
                           ஆர்தர் ஸ்கோப்ப்னோவர் ( Arthur Schopenhcuer : 1788 – 1860)  காண்ட், எகெல் ஆகியோர் கருத்துக்களுக்கு எதிரானவர். இவர் கூறுகிறார், மனித மனத்தின் மேலே உள்ளது பகுத்தறிவு உணர்வு. மனிதனின் எண்ணங்கள் அனைத்திற்கும் அடிப்படையாக, வலிமைமிக்கதாக உள்ள ஆற்றல்விருப்பாற்றல். இது இன்றேல் செயல்திறனும் காட்சிப்புலனும் கிட்டாது. மனிதன் விருப்பங்களின் தொகுப்பாக, விருப்பாற்றலின் இயக்கமாக இருக்கிறான். விருப்பங்களுள் முதன்மையானது உயிர்மேல் உள்ள விருப்பம்.
                        உயிரினங்கள் அறிவாற்றலால் வேறுபடுகின்றன; ஆனால் விருப்பாற்றலால் எல்லா உயிரினங்களும் வேறுபாடின்றிச் சமமாகின்றன என்கிறார்.இக்கருத்து, தொல்காப்பியத்தை நினைவுப்படுத்துகிறதே.-------தொடரும்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக