தொல்தமிழர் அறிவியல் – 15
2.ஞாயிறு………..
”சூரியன் ஒரு குறிப்பிட்ட
நாளில்
மட்டும்
தான் மிகச்சரியாகக்
கிழக்கே
உதிக்கும்....
அப்பறம்
கொஞ்சம்
கொஞ்சமா
வடகிழக்கு
நோக்கி
நகர்ந்து, இறுதியடைந்து
மறுபடியும்
தெற்கு
நோக்கித்
திரும்பும்...
அப்பறம்
மறுபடியும்
ஒரு நாள் கிழக்கே
உதிக்கும், அப்பறம்
தென்கிழக்கு
நோக்கி
நகரும்...
இப்படிச்
சரியாகக்
கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு
என்று இயங்கி
மறுபடியும்
சரியாகக்
கிழக்குக்கு
வர ஆகிற காலம் ஓர் ஆண்டு ஆகும்.”
சூரியனை
மையமாகக் கொண்டு
கோள்களின் இயக்கத்தையும்
காற்றின் இயக்கத் திசையையும்
அளந்து அறிந்தனர்
என்பது சங்க
காலச் சான்றோரின்
அறிவாற்றலைப் புலப்படுத்துகிறது.
இக்கருத்தைக்
கருவி அறிவியல்
நோக்கில் ஆராய்ந்து
வெளியிட்டவர் கெப்ளர்
(கி.பி.1620).
கெப்ளர் கோள்களின்
வழியை – இயக்கத்தை வரையறுத்தார். கோள்கள்
யாவும் சூரியனைச்
சுற்றி ஒரு
நீள் வட்டப்
பாதையில் செல்கின்றன
என்றார். தான் கண்டுபிடித்த உண்மைகளை
ஊரறிய வெளியிட
முடியாமல் தவித்தார்.
இவ்வுண்மைகளைக் கனவு என்ற
நூலில் ஒரு
தாய் தன்
மகளுக்குக் கூறுவதுபோல
எழுதினார். இந்நூலின் கருத்துக்களைக் கண்ட மதவாதிகள் கெப்ளரின்
தாயைச் சூனியக்காரி
என்று கூறி
விலங்கிட்டுச் சிறையில்
அடைத்தனர்.
“ வாணிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு…. “ என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
கெப்ளரின் வானியல்
கோட்பாட்டோடு சங்கச்
சான்றோரின் அறிவியல்
சிந்தனையை ஒப்பிட்டுப்
பாருங்கள். தமிழரின் அறிவியல் ஆற்றல்
புலப்படும். இன்னும்…
27 நாள்களும் (நட்சத்திரங்களும்) 7 கோள்களும் 12 ஓரைகளும் தமிழ்ச் சான்றோர்
கண்டறிந்துள்ளனர். ஏழு
கோள்களின் பெயரால்
ஏழு நாட்களும்
பன்னிரு ஓரைகள்
மாதப்பெயர்களாகவும் அமைந்துள்ளன.
ஒரு பகல்
ஒரு இரவை
– நாள் என்றும்
ஏழு நாட்களை
– ஒரு கிழமை
என்றும் கதிரவன்
வடசெலவும் தென்செலவும்
ஓர் ஆண்டு
என்றும் குறித்துள்ளனர்.
தமிழர் ஒரு
நாளை ஆறு
சிறுபொழுது கொண்டதாகவும்
ஓர் ஆண்டை
ஆறு பெரும்
பொழுது கொண்டதாகவும்
பகுத்துள்ளனர். வைகறை
விடியல் காலை
பகல் மாலை
இரவு என்றெல்லாம்
பொழுதைப் பிரித்தார்களேயன்றி இராகு காலம் எமகண்டம்
குளிசம் அட்டமி
நவமி என்றெல்லாம்
பிரிக்கவில்லை என்பதையும்
கருத்தில் கொள்ள
வேண்டும்.
கோப்பர்
நிகஸ் ( 1473 – 1543 ) என்ற
விஞ்ஞானி கோள்களைப்
பற்றி ஆராய்ந்தார்.
கோள்கள் உருண்டையானவை
என்றும் பூமி
தன்னைதானேயும் சூரியனையும்
சுற்றி வருகிறது
என்று கண்டுபிடித்தார்.
இந்த அறிவியல்
உண்மையை அவரால்
வெளியிட முடியவில்லை
; மதவாதிகள் இக்கருத்தை
வெளியிட அனுமதிக்கவில்லை காரணம்- கடவுளுக்கு எதிரான கருத்து
அது என்பதுதான். தான் கண்டுபிடித்த
அறிவியல் உண்மைகளை
நூலாக வெளியிட விரும்பினார். அவருடைய எழுபதாவது
வயதில் நூல்
வெளிவந்தது – அதன்
முதல் படியைக்
கையில் பெற்ற
உடனேயே அவர்
மாண்டு போனார். அவர் ஒரு பாதிரியார்,
அந்நூலை அப்போதைய
போப்பாண்டவருக்குக் காணிக்கையாக்கியிருந்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
உலகம் பற்றிய
அறிவியல் அறிவைத்
தமிழர் பெற்றிருந்தனர்.
உல்;
உலகம் ; ஞாலம் எனும் சொற்கள்
உலகம் உருண்டை
என்பதையும்
அது ஒரு
கோள் என்பதையும்
சுட்டுகின்றன. உலகம்
– உயிர்கள் உறையும்
இடம் என்பர்.
அறிவியல் அறிவினாலன்றோ
திருவள்ளுவர் “ சுழன்றும்
ஏர்ப் பின்னது
உலகம் ” என்றார்.
கி.பி.
16 ஆம் நூற்றாண்டில்
கோப்பர் நிகஸ்
கூறிய அறிவியல்
உண்மைகளை மக்களிடையே
பரப்பிவந்த இத்தாலி
நாட்டு ஜியார்டனே
புருனோவை மதவிரோதி
எனக் கூறி
– மதவாதிகள் அவரை
ஜெனிவாவில் கைது
செய்து – கை விலங்கு பூட்டி
இத்தாலிக்கு இழுத்து
வந்தனர். அன்று அவருக்கு அளிக்கப்பட்ட
தண்டனை…. பலரும் கூடும் சந்தை
ஒன்றில் புருனோவை
மரத்தில் கட்டித்
தீயிட்டுக் கொளுத்தினர்.
பண்டைய தமிழ்ச்சமுதாயம் புலவர்களைப் போற்றிப்புகழும் அறிவுடைச்
சமுதாயமாகத் திகழ்ந்திருந்ததனால் ஆன்றோர் பலரும் சான்றோர் மொழிந்தவற்றை
வழி வழியாகப்
போற்றிப் பல்லாயிரம்
ஆண்டுகள் நிலைபெறச்
செய்தனர்.
இயற்கையின் அரிய
பெரிய ஆற்றல்களைக்
கண்டுணர்ந்த புலவர்
பெருமக்கள் தாம்
கண்டவற்றை ;ஆராய்ந்தவற்றை; ஆய்வுக்கு உரியனவற்றை
அப்படியே பதிவு
செய்துள்ளனர். அவையாவும்
இன்று நாம்
அறிவியலோடு பொருத்திப்
பார்க்கும் அளவுக்கு அறிவியல் நுட்பம் வாய்ந்தவையாக
உள்ளன.
ஞாயிறு – வலமாக எழுதல் .
பயங்கெழு திருவின் பல்கதிர்
ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலன்
ஏர்பு விளங்கி
மல்குகடல் தோன்றியாங்கு
.....................
மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், அகநா. 298: 1 – 3
உலகில்
வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பலகதிர்களையுடைய ஞாயிறானது,
அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பல்வகைத் தொழில்களைத் தருமாறு , வலமாக எழுந்து, நீர்முகக்
கடலிலே தோன்றினாற்போல.
‘ வழையமல் அடுக்கத்து வலனேர்பு ’...
-அகநா. 328 :1
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு..
-நக்கீரர்,
திருமுரு.1, 2
.
உலகில் வாழும் உயிர்கள் எல்லாம்
மகிழும்படி, மேருவை வலமாக எழுந்து, பற்பல சமயத்தவரும் புகழ்கின்ற ஞாயிறு கீழ்க்
கடலிடத்தே எழக் கண்டாற்போன்று……தொடரும்…….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக