தொல்தமிழர் அறிவியல் – 26
உயிர்த் தோற்றம்……
உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்
கொள்கையை அறிவியல்
வழியாக மெய்ப்பித்துக் காட்டிய சி.
ஆர்.
டார்வின் ஓரணு
உயிரிலிருந்து மனிதன்
படிப்படியாக வளர்ந்துள்ள
நிலையை 1858 இல் வெளியிட்டார். அறிவியல்
உலகம் அவரை
அதிசயமாகப் பார்த்தது.
டார்வினின் இந்த
அரிய கண்டுபிடிப்பு
கடவுள் உயிர்களைப்
படைத்தார் ; மனிதனைப் படைத்தார் என்ற
மதக் கொள்கைகளைத்
தகர்த்தெறிந்தது. டார்வின்
- அரிஸ்டாட்டிலுக்கும் எம்பெடோகிளசுக்கும் கடன்பட்டிருப்பதைப்போல தொல்காப்பியருக்கும் கடன்பட்டுள்ளார் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள
வேண்டும்.
ஆறறிவு
ஆறாவது அறிவாகிய
மனத்தைப் பெற்ற
மனிதன் அதன்வழி
சிந்திக்கும் திறனைப்
பெற்றிருக்கிறான். மனத்தின்
தெளிவு நடத்தையின்வழி
வெளிப்படுகிறது. தொல்காப்பியரின் உளவியல் ஆய்வு சிக்மண்ட்
பிராய்டின் உளவியல்
ஆய்வுக்கு முன்னோடியாக
விளங்குகிறது.”ஆறறிவதுவே
அவற்றொடு மனனே”
– என்னும் கூற்று
பிராய்டின் கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. அவற்றொடு – என்னும் ஒரு சொல்லால்
தொல்காப்பியர் உளவியல்
குறித்து ஆராய்ந்த
விஞ்ஞானி ஆகிறார். அதாவது விலங்குணர்ச்சியை உள்ளடக்கிய
ஆறாவது அறிவைப்
பெற்றது மனித
இனம் என்பதுதானே
பிராய்டின் கண்டுபிடிப்பு.
கி.பி.
1856 இல் செக்கோஸ்லாவிய
நாட்டில் பிறந்து
ஆஸ்திரியாவில் வாழ்ந்த
சிக்மண்ட் பிராய்டு
பிறப்பால் யூதர்.
ஹிட்லரின் யூதர்
இன ஒடுக்கத்தில்
இவரும் தப்பவில்லை
– கொடுமைப்படுத்தப்பட்டார். இவருடைய
ஆய்வுரைகள் கொளுத்தப்பட்டன.
மனம் என்றால்
என்ன ; மனத்திற்கும் நோய்க்கும் என்ன
தொடர்பு..? என்பதை இவர் அறிவியல்
நெறிப்படி விளக்கியதாலே
மருத்துவ உலகில்
மாபெரும் புரட்சிகள்
நிகழ்ந்தன. உளவியல் அடிப்படையில் உலகில்
எல்லாருமே பைத்தியம்தான்
; விழுக்காடுதான் வேறுபடுகிறது.
பிராய்டு கூறுகிறார்
“ மனத்துள் மறைக்கப்படும்
எண்ணங்களாலேயே நோய்க்கு
ஆளாகிறார்கள். மனநோய்
உண்டாவது ஒருபுறம்
மனத்தின் பலவீனத்தை
அறிவிக்கிறது; இன்னொருபுறம்
அத்தீய நினைவின்
சக்தியிலிருந்து தன்னைக்
காத்துக் கொள்ளவும்
உதவுகிறது” என்கிறார்.
உயிரினங்களுள்
பறவைகள் குறித்து
ஆய்வுசெய்த புலவர்கள்
பல அரிய
கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
பறத்தலினால் பறவை
என்று பெயர்
பெற்றது. புள் என்பது பறவையினத்திற்கான பொதுப்பெயர். காண்க கிட்டிப்புள்(ஆங்கிலேயர் கைப்பற்றிக்கொண்ட தமிழனின்சிறுவர் விளையாட்டு -
கிரிக்கெட்) எழுந்து
பறப்பதால் அச்சிறு
கட்டைக்குப் புள்
என்று பெயர்.(Bird
– a feathered animal with two wings and two legs)
உயிரினம் குறித்து
ஆராய்ந்த தொல்காப்பியரின்
- - பகுப்பாய்வு
மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்
பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்
கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்ற
ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே
(தொல். 1500)
இந்நூற்பாவின் பொருளாவது..
இத்தலைச்
சூத்திரம் என்னுதலிற்றோவெனின் இருதிணைப் பொருளும் பற்றிவரும்
இளமைப் பெயர்
உணர்த்துதல் நுதலிற்று.
பார்ப்பு முதலாகக்
குழவியீறாகச் சொல்லப்பட்டவொன்பதும் இளமைப்
பெயர் என்றவாறு.
அவற்றுள்-
பார்ப்பும்
பிள்ளையும் பறப்பவற்றினிளமைப் பெயர்களாகச்சுட்டியுள்ளமை அறிவியல் நோக்குடையன.
“பறவைதம் பார்ப்புள்ள
“ என்று கலித்தொகையும்
“ வெள்ளாங் குருகின்
பிள்ளையும் பலவே”
என ஐங்குறுநூறும்
கூறுவதைக் காணுங்கள்.பறவைகள் எப்படிப்
பறக்கின்றன என்ற
ஆய்வு 18 ஆம் நூற்றாண்டுவரை நடந்தது.கி.பி.
9 ஆம் நூற்றாண்டில்
திருத்தக்கத் தேவர்
”பறவைகள் காற்றில்
மிதப்பதில்லை ;
காற்றைக் கிழித்துக்கொண்டு ஏகும்” என்று குறிப்பிட்டுள்ளார்
– பறவைகள் காற்றைவிடக்
கனமானவை.
பறவைகள் புலம் பெயர்தலை
– வலசை போதல்
என்று இலக்கியங்கள்
குறிக்கின்றன.
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை
--குறுங்கோழியூர் கிழார் புறநா. 20:
18-19
என்று
புறநானூறு குறிப்பிடுகின்றது.”
வதிபுள்” என்பது ஓரிடத்து நிலைத்து
வாழும் பறவையைக்
குறிப்பதாகும். பறவைகள்
உணவிற்காகவும் இனவிருத்திக்காகவும் இடம்பெயர்தலை ஆய்வாளர்கள் விரிவாக
ஆராய்ந்து வருகின்றனர்.
உயிரின வகைப்பாடு
ஆய்வாளர்கள் (Taxonomists) சுமார் 300 ஆண்டுகளாக ஆய்வு செய்து
வருகின்றனர்
சுவீடன்
நாட்டு ஆய்வாளர்
லின்னேயஸ் (1707 – 1778)
உயிரினங்களுக்கு லத்தீன்
மொழியில் இரு
பெயரிடும் முறையை
அறிமுகப்படுத்தினார். கடந்த
230 ஆண்டுகளில் சுமார்
15 இலட்சம் ”உயர்நிலை” உயிரினங்கள் இவ்வகையில்
வகைப்படுத்தப்பட்டுள்ளன. உயிரியல்
நிபுணர் ஜெ.பி.எஸ்.ஹால்டேனிடம் உயிரினங்கள்
குறித்துக் கேட்டபோது
“ ஆண்டவனுக்கு வண்டுகள்
மீது அபரிதமான
அபிமானம் உள்ளதாகத்
தோன்றுகிறது” என்றார்.
உயிரினங்களில் நான்கில்
ஒரு பகுதி
வண்டுகளாக உள்ளன.
தமிழில் தும்பி உயர் சாதி வண்டாகக்
குறிக்கப்படுகிறது.
Origin of Living beings
“ Great thinkers of the world have thought
about the origin, growth and development of living creatures of the bio – sphere. Aristotle of
the 4th century B.C. observes
that apes come, in between the beasts and men but he is unable to say at what
stage and how the changes have occurred.
Empedocles, another Greecian philosopher has said that among plants an animals,
those that are the fittest alone survive and others perish.Sage Sushtruda, an ancient Medical practitioner of the 6th
century B.C. has divided the living beings into four groups. Charles Darwin a
naturalist of England has also spoken about the theory of the survival of the
fittest in his work, The Origin of Species (1858). Darwin’s Theory of Evolution
shattered the good – old Biblical theory that God has invented men, women and
also the living beings of the world.
If the modern world is indebted to all
these great thinkers and researchers who spoke about the origin, evolution and
classification of all living beings, no less should be their indebtedness to
Tolkappiyam of the Pre- Christian who
has divided the living beings into six groups on the basis of six senses he
attiributes to them in about half a
dozen stanzas in the Marabiyal of Porulathikaram.
Senses Faculty
Grass, Plants and Trees - First sense
………. Touching
Lobsters and Oyters Second
sense……also smelling
Ants and white ants Third sense
………also tasting
Bees and flies Fourth
sense ……..also visualing
Birds and beasts Fifth
sense ………..also listening
Human beings Sixth
sense ………..a;so of mind
Man’s
mind is exclusive faculty in addition to all the five senses that other
inferior beings possess. It is the sixth sense that elevates human beings over
and above the level of all other irrational beings. Reasoning power or a
rational sense is an exclusive and Pre-dominant faculty of human beings. In
other words, psychic power of human beings, Tolkappiyar has highlighted in his
magnum opus – Tolkappiyam.
Sigmund Freud, a Jewish philosopher has
gone deeper into it in the 19th century and evolved a psycho-analytical
study of mind. But the credit of identifying psychic power alias the six senses
among men and women goes to Tolkappiyar of the Pre-christian era.” –Editor.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக