தொல்தமிழர் அறிவியல் – 25
4. உயிர்த் தோற்றம்
உலகத்
தோற்றம் குறித்து
ஆராய்ந்த சான்றோர்
– உயிர்த் தோற்றம்
குறித்தும் தம்
சிந்தனைகளை வெளியிட்டுள்ளனர்.
உயிரற்றவையிலிருந்து உயிர்கள்
தோன்றுகின்றன என்பர்
சமணர். கி.மு.
4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியலின் தந்தை
அரிஸ்டாட்டில் உயிர்த்
தோற்றம் குறித்து
ஆராய்ந்துள்ளார். அவர்
குரங்குகள் – மனிதனுக்கும்
விலங்குகளுக்கும் இடைப்பட்டவை
; ஆனால் எந்த
இடத்தில் இந்த
மாற்றம் நிகழ்கிறது
என்பதை வரையறுத்துச்
சொல்ல முடியவில்லை
என்கிறார். கி.மு.
450இல் வாழ்ந்த
எம்பெடோகிளஸ் என்ற
கிரேக்க விஞ்ஞானி
மண்ணிலே தோன்றும்
உயிர்கள் தாவரங்களையும்
விலங்குகளையும் தோற்றுவிக்கின்றன
; இவற்றுள் தகுதி
உள்ளவையே வாழ்கின்றன
என்றார். இவரே பரிணாம
வளர்ச்சிக் கொள்கையின்
தந்தை என்று
போற்றப்படுபவர். கி.மு.
6 ஆம் நூற்றாண்டில் இந்திய மருத்துவத்தில்
தலைசிறந்து விளங்கிய
சரகர் சுஸ்ருதர்
உயிர்களை நான்காகப்
பகுத்தனர்.
இவ்வரலாற்றில்
தொல்காப்பியர் உயிர்களின்
பரிமாண வளர்ச்சியை
வளப்படுத்தியுள்ளார். இவர்
உயிர்களை ஆறு
வகையாகப் பகுத்துள்ளார்.
இப்பகுப்புமுறை புலனறிவு
அடிப்படையில் அமைந்து- இன்றைய அறிவியல் கொள்கையோடு
பெரிதும் ஒத்துள்ளதை
அறியமுடிகிறது.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே (புல். மரம் முதலிய இவ்வினம்
– தொடு உணர்வு - அறிவு)
இரண்டறி வதுவே அதனொடு நாவே( நத்தை. சிப்பி முதலிய இவ்வினம்-தொடு உணர்வோடு
சுவை உணர்வும்)
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே (
கறையான். எறும்பு முதலிய இவ்வினம்
- தொடு.சுவை. நுகர்வு உணர்வுகள்)
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ( வண்டு . தும்பி. முதலிய இவ்வினம் - தொடு .சுவை. நுகர்வு. கண்-
பார்வை உணர்வுகள்)
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ( விலங்குகள்
. பறவைகள் முதலிய
இவ்வினம் - தொடு.சுவை. நுகர்வு. பார்வை. செவித்திறன் உணர்வுகள்)
ஆறறி வதுவே அவற்றொடு மனனே ( மேற்சுட்டிய ஐந்து
உணர்வுகளோடு மனம்
என்னும் உணர்வும்
அமையப் பெற்றவை
மக்களும் பிறவும்.
–
தொல்காப்பியர் உயிரினங்களை
அறுவகையாகப் பகுத்தார்விலங்கியலார் பன்னிரண்டு
வகையாகப் பகுத்துள்ளனர்.
--தொல்.1526.
மக்கள் தாமே ஆறு அறிவுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே
-தொல். 1532
மக்களுக்கு மெய்
வாய் கண்
மூக்கு செவி
என ஐம்பொறிகளும்
சுவை ஒளி
ஊறு ஓசை
நாற்றம் என
ஐம்புலன் உணர்வுகளும்
இருப்பதால் ஐயறிவும்
– ஆறாவதாக மனம்
என ஒன்று
பெற்று நன்மை
தீமை அறிவதாலும்
சிந்திப்பதாலும் அவர்களை
ஆறறிவு உடைய
உயிரினம் என்பார்
தொல்காப்பியர். பிறவும்
உளவே அக்கிளைப்
பிறப்பே – எனக் கூறியதால் மக்களைப்
போன்று ஆறு
அறிவு உடையனவாக
குரங்கு யானை
கிளி முதலியவற்றுள்
மன உணர்வுடைய
உளவாயின் அவையும்
ஆறறிவுயிராய் அடங்கும்
என உரை
வகுத்துள்ளார் இளம்பூரணர்.
இவ்வாறு தொல்காப்பியர் உயிர்களை வகைப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியதாகும். இரண்டு மூன்று நான்கு அறிவுடையவை முதுகெலும்பற்றவை; ஐந்து ஆறு அறிவுடையவை முதுகெலும்புள்ளவை.-------தொடரும்…….
உயிரின் தோற்றம் தொடர்பான அரிய கருத்துகளை அறிந்தேன் ஐயா.
பதிலளிநீக்கு