வியாழன், 5 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் – 74 : 24. கூந்தல்கழித்தல்

தொல்தமிழர் அறிவியல் – 74 :  24. கூந்தல்கழித்தல்

கூந்தல்பிரிவுத் துயர்

அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயில் கலாவம் கால்குவித்து அன்ன
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே. –
   --அரிசில்கிழார். புறநா. 146: 7 - 11
                                  நீ, அருளாமையாற் கண்டார் இரங்க மெலிந்து அரிய துயரத்தான் வருந்தும் உன்னுடைய திருந்திய அணியையுடைய அரிவையது தழைத்த மயிலினது பீலியைக் காலொன்றாகக் குவித்தாற் போன்ற தழைத்த மெல்லிய கூந்தற்கண்ணே மணங்கமழும் மாலையைச் சூட வளவிய செலவையுடைய உயர்ந்த தேரை, நின் குதிரைகள் பூண்பனவாக.
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
 --பெருங்குன்றூர்கிழார்.புறநா. 147: 5 - 6
தனிமை கொண்டிருந்த தலைவியின்அரிபரந்த குளிர்ச்சியை யுடைய கண்ணினையும் அழகிய மாமை நிறத்தினையும் உடைய அந்த அரிவையது நெய்யால் துறக்கப்பட்ட மை போலும் கரிய மயிரை..

   கைம்பெண்டிர்கூந்தல் கழித்தல்
சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும்
கழிகல மகளிர் போல
வழி நினைந்திருத்தல் அதனினும் அரிதே
                      -மாறோக்கத்து நப்பசலையார்,புறநா.280:13-15

                      சிறிய வெள்ளிய ஆம்பலிடத்து உண்டாகும் அல்லி அரிசியை உண்ணும் , அணிகலன்களைக் கழித்த கைம்பெண்டிர் போல தலைவன் இறந்த வழிப் பின்னே வாழும் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம்எனத் தலைவி வருந்துகிறாள்.

மகளிர் கணவனை இழந்தபின் அவர் ஒருவராலன்றிப் பிறரால் தீண்டப்படாத தம் கூந்தலைக் கழித்துவிடுவது பண்டையோர் மரபு.
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி,அல்லியுணவின் மனைவியொடு (புறநா. 250) எனப் பிறரும் கூறுவது காண்க.

மென்சீர்க் கலிமயிற் கலாவத்தன்ன இவள், ஒலிமென் கூந்தல் உரியவாம் நினக்கே(குறுந். 225) எனவும்
குறுந்தொடி மகளிர், நாளிருங் கூந்தற்கிழவரைப் படர்ந்து ( புறநா.113 ) எனவும்

                    சான்றோர் கூறுவனவற்றால் மகளிர் கூந்தலைத் தீண்டும் உரிமை கணவர் ஒருவற்கே உண்டென்பதும் எனவே கூந்தற்குரியர் இறந்தவழி கூந்தலும் உடன்கழித்தல் முறைமையென்பதும் பண்டையோர் கொள்கையாதல் தெளியப்படும். மழித்த தலை மழித் தலையெனவும் வைத்த தலை வைத்தலை(பதிற்.44) எனவும் வருதல் விகாரம். (ஒளவை சு.து.உரை)

The ongoing tragedy of India’s widows

By Sara Barrera/Guest Blogger and Eva Corbacho/Guest Blogger — June 22, 2012
Widows in India have a pronoun problem. The estimated 40 million women widows in the country go from being called “she” to “it” when they lose their husbands. They become “de-sexed” creatures.

Clearly, it’s more than a problem of language, although that discrimination goes further, with epithets such as “husband eater” used against them. In the northern Indian state of Punjab, a widow is referred to as randi, which means “prostitute” in Punjabi. In this region, they usually arrange for the widow to marry her deceased husband’s brother because being owned by a man is a way to avoid being raped.

“Widowhood is a state of social death, even among the higher castes,” says Mohini Giri, a veteran activist in the fight for women’s rights who was nominated for the Nobel Peace Prize in 2005. She is also the director of the Chennai-based social work nonprofit organization Guild for Service. “Widows are still accused of being responsible for their husband’s death, and they are expected to have a spiritual life with many restrictions which affects them both physically and psychologically.”------தொடரும்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக