தொல்தமிழர் அறிவியல் –
78 : 25.
ஐந்தறிவில்
ஆறறிவு
25. ஐந்தறிவில் ஆறறிவு
மக்கள்தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே
அக்கிளைப் பிறப்பே
-தொல். 3: 9: 577
முப்பத்திரண்டு அவயவத்தான்
அளவிற்பட்டு அறிவொடு
புணர்ந்த ஆடூஉ, மகடூஉ மக்கள் எனப்படும். அவ்வாறு உணர்விலும் குறைவுபட்டாரைக்
குறைந்தவகை அறிந்து
முற்கூறிய சூத்திரங்களானே
அவ்வப் பிறப்பினுள்
சேர்த்திக் கொள்ளவைத்தான்
என்பது அவை ஊமும் செவிடும்
குருடும் போல்வன. கிளையெனப்படுவார் தேவரும்
தானவரும் முதலாயினார்
பிறப்பு என்றதனால்
குரங்கு முதலாகிய
விலங்கினுள் அறிவுடையன
எனப்படும் மன உணர்வு உடையன உளவாயின் அவையும்
ஈண்டு ஆறறிவுயிராய்
அடங்கும் என்பது தாமே
எனப்
பிரித்துக் கூறினைமையான்
நல்லறிவுடையார் என்றற்குச்
சிறந்தார் என்பதும்
கொள்க.(பேராசிரியர்
, உரை)
ஒருசார் விலங்கும் உளவென மொழிப. – தொல்.3: 9: 578
விலங்கினுள் ஒரு சாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு ; அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின. ( இளம்பூரணர், உரை)
கிளி, குரங்கு, யானை –ஆறறிவு உடையன எனத் தொல்காப்பியர் வழிநின்று கண்டுபிடித்ததோடு அம்மூன்றோடு முதலாயின என்றும் கூறுவதன் நோக்கம் யாதெனின் தம் காலத்திற்குப் பின்னே அறிவியல் அறிஞர்கள் வேறு சில விலங்குகளையும் ஆறறிவு உடையன என்று கண்டுபிடிக்கலாமல்லவா..?
அறிவியல் நோக்கு
“The ancient Tamils had as profound an
understanding of animals and birds as of humans.
Tolkappiyam,
in its Marapiyal speaks of the
classifications of all living beings into six groups.
It is the human beings that have six senses;
There are others also of the same class of birth
Tolkappiyam, 1524
In addition
to stating that there are other organisms that have six senses like human
beings, Tolkappiyar significantly adds,
They say there are animals that have six senses
Tolkappiyam, 1525
While
interpreting the last Nurpa, Ilampuranar
observes that besides men and women, there are
other beings like parrots,
monkeys and elephants which are also endowed with six senses.”
----Prof.
P. Marudanayagam.
ஈண்டுத் தொல்காப்பியரின் அறிவியல் அறிவும் ; அவர் வரையறுத்த ஆறறிவுக் கோட்பாடும் அக்கோட்பாட்டிற்கு உரைவகுத்த உரையாசிரியர்களின் அறிவியல் அறிவுத் திறனும் போற்றுதற்குரியதன்றோ..!
தொல்காப்பியரின் கருத்து அறிவியல் உண்மையெனின் அதற்குச் சான்று வேண்டுமே…. !
கிளி – ஆறறிவு (PARROT – SIX SENSES)
“ Pet Parrot
helps Agra police arrest killer of its owner” –
“Neelam, wife of Vijay Sharma, the editor of a Hindi daily, was found
murdered at her residence on Feb.20. Her husband noticed a change in the
behavior of the parrot whenever his nephew Ashutosh visited their house after
the murder. During discussions too, whenever
Ashutosh’s name was mentioned, the parrot would start screeching. This
raised my suspicion and I informed the police”, said
Sharma.
SSP Agra,
Shalabh Mathur, said that Ashutosh has confessed to the crime.
“we checked
his call details and took him in custody. He accepted his crime and informed us
that he was accompanied by an accomplice. They had entered the house with the
intention of taking away cash and other valuables.”, he said. Afraid that his
aunt might recognize him, he stabbed her and the dog when it started barking.
But he hadn’t accounted for the parrot who was watching. –Times of India, 27/02/14
Avvaiyaar
and Kabilar
Here,
in ancient Tamil literature Avvaiyaar, and Kabilar speak of the extraordinarily intelligent behavior of Parrots:
When
Pari’s land of PaRampu was besieged by the three Tamil monarchs, Kapilar, one
of the greatest of Sangam poets. Sent a number of parrots
trained by him to bring from outside ears of paddy so that people inside
may not suffer from want of food. This is reported in the poem “ ulakudan thiri
tharum …….. Pari and the the old commentary on it. See also Avvaiyaar’s “ urai saal vaNpukazh Pari…” ----Akam.303.
உரைசால் வண்புகழ்ப் பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி
முடங்குபுறச் செந்நெற்
றரீஇயர் ஓராங்கு
இரைதேர் கொட்பினவாகிப் பொழுதுபடப்
படர்கொண் மாலைப் படர்தந்தாங்கு
ஒளவையார்,
அகநா.303 : 10
-14
உரைத்தல் அமைந்த வளவிய புகழினையுடைய பாரியினது பறம்பு அரணில் வரிசையாகப் பறத்தலையுடைய குருவியின் கூட்டம் காலையில் புறம்
போய்வளைந்த புறத்தினையுடைய சிவந்த நெற்கதிர்களைக் கொணர்ந்து தருமாறு ஒருங்கே அந்நெற்கதிருள்ள
இடத்தை ஆராய்ந்து திரிதலையுடையனவாகி, ஞாயிறு மறைய துன்பத்தைத்
தரும் மாலைப் பொழுதில் மீண்டு வந்தாற்போல.
பாரியின் பறம்பு அரணை மூவேந்தரும்
முற்றியிருந்த பொழுது, அகத்திருப்பார் உணவின்றி வருந்தாவாறு,
கபிலர் என்னும் நல்லிசைப் புலவர் கிளிகளை வளர்த்து வெளியிலிருந்து கதிர்களைக்
கொண்டுவரச் செய்தனர் என்பது வரலாறு. இதனை “ உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய் மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று,
செழுஞ்செய் நெல்லின் விளைகதிர் கொண்டு….. வேந்தர்
ஓட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி” என்பதனாலும், கபிலன் சூழ என்றது பாரியை அரசர் மூவரும் வளைத்திருப்ப அகப்பட்டிருந்து உணவில்லாமையால்
கிளிகளை வளர்த்துக் கதிர் கொண்டுவர விட்ட கதை என்ற அதன் பழைய உரையினாலும் அறிக.--ந.மு. வே .நாட்டார் உரை.
பறவையினத்துள்
கிளி ஆறறிவு உடையது என்பதும் உண்மையே ! .-----------தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக