தொல்தமிழர் அறிவியல்
–80 : 25.
ஐந்தறிவில்
ஆறறிவு
குரங்கு ----ஆறறிவு
கருங்கண் தாக்கலை
பெரும்பிறிது உற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளை முதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப்
பாய்ந்து உயிர் செகுக்கும் --- குறுந். 69
கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு, - இறந்தது அறிந்து, கைம்மைத் துன்பத்தைப் போக்கமாட்டாத, விருப்பத்தையுடைய பெண்குரங்கானது, மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, சுற்றத்தினிடத்து, கையடையாக ஒப்பித்து, ஓங்கிய மலைப் பக்கத்தில், தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும்.
காட்டில் விலங்குகள் நீருண்ணக் கிடக்கும் நீர் நிலை வற்றிப்போக
அதில் கிடக்கும் முதலைகள்சேறுடன்கலங்கிய குட்டையில் உழன்று கொண்டிருக்க மான்,
குரங்க்கு முதலிய விலங்குகள் முதலைக்கு அஞ்சி உயிரைப் பணையம் வைத்து
நீர் அருந்த முயல.. குரங்கு தன்னையும் தன் இனத்தையும் காப்பாற்றிக்
கொண்டு நீர் அருந்துவதற்கு முதலையின் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைக்க, சேற்றுநீர்க்குட்டையின் சற்றுத் தொலைவில் ஊற்று தோண்டி நீர் அருந்தும் செயல் குரங்கு ஆறறிவு உடையது என்பதற்குத்
தக்க சான்றாகும்.
----Nat-Geo . Tamil Channel – 27/1/17.
ஐந்தறிவும் ஆறறிவும்
தொல்காப்பியர் - அரிசுடாட்டில்
அறிவியல்
அறிஞர்கள் உயிர்களை
வகைதொகைப் படுத்துவதில்
பன்னெடுங்காலமாக ஆராய்ச்சி
செய்து வருகின்றனர்.
மிகத் தொன்மைக்காலத்தே கிரேக்க அறிஞர்களும் தமிழ்ச்
சான்றோர்களும் இவ்வாய்விற்குப் பெரும் பங்களித்துள்ளனர் என்பது
ஈண்டு அறிந்து
இன்புறுதற்குரியதாகும். அறிவியல்
புலமை என்பது
தமிழ்ச் சான்றோர்களுக்குப் புதியதன்று, இயற்கையோடியைந்த வாழ்வில் அவர்தம் கண்ணில் பட்டவையெல்லாம் இயற்கையின் அற்புத ஆற்றலை
உணர்த்தியதேயன்றிக் கண்ணுக்குப்
புலப்படாத கடவுள்
படைப்பாக அவர்கள்
ஒருபோதும் எண்ணியதில்லை
என்பதை அவர்தம்
படைப்புகளின் வழி
அறிய முடிகிறது.
அறியும் ஆற்றல் (Perception )
The famous philosopher
Aristotle was the first to assign humans with five traditional senses: sight,
hearing, touch, taste and smell. However, if he was categorizing animals, his
list of senses might have been longer. Several animals possess additional
perceptive abilities that allow them to experience the world in ways we can
barely imagine. Here's our list of 11 animals that have a sixth sense.
‘அறிவியலின்
தந்தை ‘ அரிசுடாட்டில்( கி.மு.384 322) ஐம்புல அறிதிறன்
குறித்துக்
கூறும்போது, கண், காது, மெய்,(தொடு உணர்வு) நாக்கு (சுவை) மூக்கு ( நுகர்வு) என்று வரையறுத்துள்ளார்
.
திருவள்ளுவர்
சுவைஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு . (27)
என்று நாக்கு,(சுவை), கண் (ஒளி) மெய் (தொடு உணர்வு), காது (ஓசை) மூக்கு ( நாற்றம்)
என்றும்
பொறிவாயில்
ஐந்தவித்தான்….(6) எனப் பொறிவாயில்களாக,
மெய். வாய், கண், மூக்கு, செவி என்றவாறு
வகைப்படுத்துவார்.
ஐந்தவித்தான்
ஆற்றல்…..(25) என்று ஐம்பொறிகளால்
நுகரப்படும்
உணர்ச்சிகளை
ஐம்புலன்களையும்
அடக்கியாளுதல்
குறித்துப்பேசுகின்றார்.
இவ்விரு
பேரறிஞர்களும்
மனித உயிரின்
இயங்கு
பொறிகள்
குறித்து
ஆராய்ந்து
அறிந்த
திறம் அறிவியல்
அடிப்படையில்
அமைந்ததே
என்பதை
அறிதல்
வேண்டும்.
இவ்வைந்து
புலன்களோடு
ஆறாவதாக
மனம் இடம் பெறுகிறது.
‘ஆறறி வதுவே அவற்றொடு
மனனே –( 3:9: 26) என்பார்
தொல்காப்பியர்.
புலன்களை
வெறும்
பொறிகளாகக்
கொள்ளாது
அவற்றை
அறிவு எனக் கொண்டு
ஆறாவது
அறிவாக
மனம், உயிரிகள்
அனைத்தினும் மேம்பட்ட ஆற்றல்
வாய்ந்ததாக
மனித உயிர் விளங்க
அடிப்படையானது
என்ற அறிவியல் உண்மையைப் பதிவு செய்கிறார்
தொல்காப்பியர்.
அடுத்து, அரிசுடாட்டில், தொல்காப்பியர்
கூறியுள்ளதைப்போல
விலங்கினத்தில்
ஆறறிவு
உடையவையாக
பதினொரு
விலங்குகளைக்
குறிப்பிடுகின்றார்,
அவற்றுள்
நீர் வாழ்வனவும்
நிலவாழ்வனவும்
அடங்கும். ஆறறிவுடையனவாக
புறா, வெளவால், கடல் ஆமை ஆகியனவும்
இடம்பெற்றுள்ளன.
தொல்காப்பியர், மக்களை ஆறறிவுயிர் என்று சுட்டி, பிறவும் உளவே… என்று கூற, இளம்பூரணர் யானை, குரங்கு, கிளி முதலியன என்று அறிவியலுக்குப் பொருந்துமாறு தொல்காப்பியர் உள்ளக்கிடக்கையை விரித்துரைப்பார். மேற்சுட்டிய மூன்றும் அரிசுடாட்டில் பட்டியலில் இல்லை என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.-------தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக