சனி, 14 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –83 : 26. யானை

   தொல்தமிழர் அறிவியல் –83 :  26. யானை

                         
      Musth is a highly aggressive even psychotic state of heightened sexuality and aggression that males elephants go through every 3 to 6 months. Both African and Asian elephant males experience it. Violence attributed to rogue elephants is usually the work of males in musth. Many elephant attacks on humans are by males in musth.
Musth (derived from the Hindi word for intoxicated) can drive normally placid males into a frenzy and drive bulls to charge across the plain and lock tusks with other males to win females in estrus. Musth usually lasts only for a few days and is caused by a gland located about halfway between the animals' eye and ear. This glands swells during musth and produces a strong-smelling, sticky, dark liquid that dribbles and even flows from the elephant's head, staining the lower part of its face.


யானை மதநீர்

மதநீர் (Musth) என்பது ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும், இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது. (விக்கிபீடியா)

யானைக்கு -  மதம்
.......................................... யானை
குளகு மென்று ஆள்மதம் போல
                                                   மிளைப் பெருங்கந்தன், குறுந். 136: 3,4
அடங்கிக் கிடக்கும் யானையின் மதம் அதிமதுரத் தழையை மென்று தின்னத் தின்ன பெருகுவதாயிற்று.
விலங்குநூல் வழி யானைக்கு மதம் பிடித்தல் – தழை, மதம் நீக்க – வாழைத்தண்டு இஃது உண்மையா என்று ஆய்க.
மேலும் காண்க : சீவக.750........

மதநீரொழுகல்

தூங்குகையா னோங்கு நடைய
உறழ்மணியா னுயர் மருப்பின
பிறைநுதலாற்  செறனோக்கின
பாவடியாற் பணை யெருத்தின
தேன்சிதைந்த வரைபோல
மிஞிறார்க்குங் கமழ் கடாத்
தயறு சோரு மிருஞ் சென்னிய
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க..
                                            குறுங்கோழியூர் கிழார், புறநா. 22 : 1 – 9
                           அசைந்த பெருங்கையுடனே தலையெடுத்து நடக்கும்  உயர்ந்த நடையையுடையனவும் அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்று பட்டொலிக்கும் மணியுடனே உயர்ந்த கோட்டினையுடையனவும் பிறை வடிவாக இடப்பட்ட மத்தகத்துடனே சினம் பொருந்திய பார்வையை யுடையனவும் பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடையனவும் தேனழிந்த மலைபோலத் தேனீ யொலிக்கும் மணம் நாறும் மதத்துடனே புண்வழலை வடியும் பெரிய தலையையுடையனவுமாகிய வலிமிக்க இளங்களிறு கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலேயே நின்று அசைய
-------.வே.சா. உரை.

விழுச்சூழிய விளங்கு ஓடைய
கடுஞ் சினத்த கமழ் கடாஅத்து
அளறுபட்ட நறுஞ் சென்னி
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
 மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  43 - 47
                                போர்த் தொழில் பழகிய பெரிய யானைகள் சிறந்த முகபடாத்தை உடையவை  ; விளங்கும் நெற்றிப் பட்டம் அணியப்பெற்றவை, மிகுந்த சினத்தை உடையவை ; மணம் கமழும் மதநீர் ஒழுகுவதால் சேறு படிந்த தலையினை யும் , மலை என்று மயங்கும் வண்ணம் தோற்றமும் கொண்டவை . இவை சினம் மிகுந்து போர்க்களத்தில் உள்ள வீரர்களைக் கொன்று திரிவன.
                           யானையின் மதநீர்க்கு மணம் உண்டு, மதநீரின் மணம் மணமகளின் கூந்தலின் மணம் போன்றது என்று திருத்தக்கதேவர் கூறுவார்.
`வரி வண்டார்க்கும் வாய்புகு கடாஅம் – (புறநா. 93.)
 மேலும் காண்க : கலித். 21 , அகநா. 78.
 புணர் மருப்பு யானையின் புயல்கொள் மும்மதம்
 மணமகள் கதுப்பு என நாறும்சீவக. 1621.

யானைக்குச் சினம்

பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்திக் கசிந்தளர் அலைப்ப
கையிடை வைத்த மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் …………………..
                                                     ஓரம்போகியார்.நற். 360 : 6 – 9
பலரும் இகழ்ந்து கூறியதால் வருந்திய பாகன்இருப்பு முனையாலே யானையைத் துன்புறுத்தினான். அதனால் சினம் கொண்ட யானை தனக்கிட்ட கவளத்தைத் துதிக்கையால் உடம்பில் வாரி இறைத்துக் கொண்டது.-------தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக