ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –84 : 26. யானை

தொல்தமிழர் அறிவியல் –84 :  26. யானை

இனச் சேர்க்கைபோர்

விறன்மலை வியல் அறை வீழ்பிடி உழையதா
மறம்மிகு வேழம் தன்மாறு கொள் மைந்தினான்
 புகர் நுதல் புண் செய்த புய்கோடு…….
                           கபிலர். கலித். 53 : 2 - 4
                         அகன்ற பாறையிடத்தே வாழும் களிறு தான் விரும்பிய பெண் யானையைத் தன்னிடத்தே கொண்டிருந்ததுவீரம் மிக்க அந்தக் களிறு தனக்கு மாறாகிய மற்றொரு யானையைத் தனது ஆற்றலால் புள்ளியுடைய அதன் நுதலைக் கொம்பினால் குத்திப் புண்ணாக்கி விரட்டியது.       ( விலங்கினம் தன் இனத்தில் பெண் துணையைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போர்புரிந்து தன்  வலிமையைக் காட்டும்இஃது அறிவியல் உண்மை )

யானை – உயிர்நிலையில்......

இரும்பு வடித்தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்திக் கோல் தெரிந்து
வரி நுதல் யானை அருநிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண்கோடு கொண்டு..
                                         மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார், அகநா. 172 : 6-9
  இரும்பை உருக்கி வார்த்துத் திருத்தமாகச் செய்தது பொன்ற வலிமை மிக்க கையினையுடைய வேட்டுவன் மலர்ந்த மலரினையுடைய வெண்கடம்ப மரத்தின் மீது சாய்ந்து நின்ற வண்ணம் கையிற்கொண்ட அம்பினை ஆய்ந்து எடுத்து வரிகள் பொருந்திய நெற்றியையுடைய யானையின் அரிய மருமத்தில் எய்து கொல்வான் ஆற்றல் மிக்க அவ் யானையின் வெண்ணிறக் கொம்பினைக் கொண்டு வருவான்...
மேலும் காண்க: குறுந்.272.
புணர்ச்சி
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டி
முதுவெங் கண்ணனார்.நற்.232: 1- 2
சிறிய கண்ணையும் பெரிய கையையும் உடைய  யானையின் ஆண்பெண்ணாகிய இரு இனமும் மலைப் பச்சைச் சூழ்ந்த குளிர்ந்த குளத்தில் மெய் தளருமாறு புணர்ந்து மகிழும்.

Male Elephants Fight

                                Fights take place when a challenger challenges the male guarding the female. Before a fight the elephants often kick up a lot of dust. The winner of one battle may find himself defeated by another male who eventually mate with the female. The battles are often over in a minute after one bull, usually the oldest, has asserted itself as the strongest and most powerful. Some of the fights last several hours if the bulls are more evenly matched.

சூல் கெடுமே

வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இருவெதிர் ஈன்றவேல் தலைக் கொழுமுளைச்
சூல்முதிர் மடப்பிடி நாள் மேயல் ஆரும்
கந்தரத்தனார். நற். 116 : 3-5
                         சூல் முதிர்ந்த இளைய பெண் யானை ; தன் வயிற்றுச் சூல் கெட்டுப்  புறத்தே வெளிப்படுமாறு பெரிய மூங்கிலின்  முளைத்து எழுந்த ; இலையில்லாத கொழுத்த முளைப்பகுதியை  அறியாது தின்னும்.
மூங்கில் முளையைத் தின்றால் பிடியின் சூல் கெட்டுவிடுமா ?

யானை தன் கதுப்பின்கண் அடக்கிய எறியுங் கல்லைப்போல் மறைத்த வலிமையுடையையாதலான்..

களிறு கவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை யாதலின்….
உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறநா. 30: 8-9
யானை தன் கதுப்பில் அடக்கி எறியும் கல் போல மறைத்த வலிமையுடையாய் .
காய்ந்தெறி கடுங் கல் தன்னைக் கவுள்
கொண்ட களிறு போல…….சீவக.2910

Description
                           
Short  article detailing the peculiar case of an elephant who consumed vast quantities of stones, precisely 168 stones, weighing altogether 7lb. 13oz. The case was presented to the Zoological Society by Dr. A. Smith Woodward and the stones were found to be mostly quartzite. The article ends by stating that, while cases of this type are common with crocodiles, this seems to be the first recorded case of their occurrence in an elephant.--------தொடரும்……

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக