புதன், 25 செப்டம்பர், 2019

தொல்தமிழர் அறிவியல் –94 : 30. அன்னப் பறவை

தொல்தமிழர் அறிவியல் –94 : 30. அன்னப் பறவை

30. அன்னப் பறவை

இமய மலை உச்சியில் பறக்கும்
நிலம்தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
இலங்கு மென் தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அலகு இரை ஒய்யும்
--பரணர். நற். 356 : 1 – 5
                  
                   நிலம் தாழ்ந்த இடத்தை உடைய தெளிவான கடல் அருகில் அழகிய சிறகையும் சிவந்த காலினையும் உடைய அன்னப் பறவை இரை தேடியது.இமயமலையின் உச்சியில் இருக்கும் வானர மகளிர் மகிழ்ந்து விளையாடுவதற்குரியவளராத இளம் குஞ்சுகளுக்கு அன்னம் தான் வாயில் சேமித்த இரைகளைக் கொண்டு சென்று கொடுக்கும்.
                           
                     இமயமலைநீளம்.2400 கி.மீ. ; அகலம் – 160 – 240 கி.மீ. ; உலகின் மிகப்பெரிய மலை. மிகப்பெரிய சிகரம் எவரெஸ்ட் -8850 மீட்டர் உயரம்.
செங்கால் அன்னம் என்ற குறிப்பு ஈண்டு நோக்குதற்குரியது.                                   இடைக்காலத்தார் அன்னம் குறித்துப் பல்வேறு வகையான புனைந்துரைகளை இட்டுச் சென்றுள்ளனர் , குறிப்பாக அன்னப்பறவை பாலையும் நீரையும் பிரித்துண்ணும் ஆற்றலுடையது என்று  குறித்தனர்.

                      பரணர் அன்னப்பறவையின் தோற்றத்தை மிக நுண்மையாக நோக்கிப் பதிவு செய்துள்ளார்வான் வெளியில் மிக உயரத்தில்  உயிர்வளி (ஆக்சிசன்) மிகக் குறைவாகக் கிடைக்கும் நிலையிலும் அன்னப்பறவை அதி வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையது என்று அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் வெறுங்கண்ணால் கண்டு, பதிவு செய்த பரணரின் அறிவியல் அறிவாற்றலைப் புகழ்ந்துரைக்கவும் இயலுமோ..!

மடநடை மாஇனம் அந்தி அமையத்து
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒருபால்
இரை கொண்டு இருந்தன
--- மருதன் இளநாகனார், கலித். 92 : 17 – 19
                              ……………… அன்னங்கள் தன்னிடத்தைவிட்டுப்போகாத இமயமலையில் ஒருபக்கத்தே இரைகவர்ந்த இளைப்பால் ஓய்ந்து பறக்கும் மடப்பத்தையுடைத்தாகிய நடையினையுடைய அன்னத்திரள் அந்திக்காலத்தே தங்குதல்கொண்டிருந்த தன்மையவாக…….

இமயமலை சிகரம் தொட்டுப்பறக்கும் அன்னம் : அன்னப் பறவை என்ற சிறப்புக்குரியதும்  இஃது ஒன்றே.  
அன்னச்சேவ லன்னச் சேவல்
……     ……  ……….     …  ….
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடமலை பெயர்குவை யாயினிடையது
சோழநன் னாட்டுப் படினே…..
                                 --பிசிராந்தையார், புறநா. 67 : 1, 6 – 8

                குமரி யாற்றினது பெரிய துறைக்கண்ணே அயிரைமீனை மேய்ந்து வடதிசைக்கண் இமயமலைக் கண்ணே போகின்றாயாயின் இவ்விரண்டிற்கும் இடையதாகிய நல்ல சோழ நாட்டின்கண் பொருந்தின்……………………
               
                       இப்பாட்டின்கண் புலவர் பெருமான் அன்னச்சேவலானது தென் திசை எல்லையாகிய குமரியாற்றில் இரைகொண்டு, வடதிசை எல்லையாகிய இமயமலை நோக்கிப் பறக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். குமரியாறு கடல் கொள்ளப்படுவதற்கு முன் இப்பாடலை இயற்றியதாகக் கொள்ள இடமுண்டு. தென்கோடியிலிருந்து புறப்பட்ட அன்னம் வடகோடி சென்றடைய  எவ்வளவு தொலைவு என்பதைக் கணக்கிட வேண்டும் ; அவ்வளவு தொலைவு அன்னம் தொடர்ந்து பறந்து செல்லும் (இளைப்பாறிச் செல்லும்) ஆற்றல் உடையது என்பதையும் அறிவியல் கண்கொண்டு
அறிகிறோம்.
.
அறிவியல் நோக்கு

Highest Flying Bird Found; Can Scale Himalaya

The bar-headed goose can reach nearly 21,120 feet, new study shows.
By  National Geographic News
The world's highest flying 
bird is an Asian goose that can fly up and over the Himalaya in only about eight hours, a new study finds.-----தொடரும் ---

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக