ஞாயிறு, 7 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 85 “ ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி ஊக்கம் உரையார் உணர்வு உடையார் – ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.” ---நாலடியார். அறிவுடையார், எடுத்த செயல் முடியுமளவு, முயற்சி மேற்கொள்ளும் தமது மன வலிமையை பிறருக்கு வெளிப்படுத்த மாட்டார்கள்.பிறருடைய மன வலிமையை அவர் செயல்படும் வழிமுறைகளின் தன்மையாலேயே அறிந்து கொள்வர்.ஆதலால் உலகமெல்லாம் அப்படிப்பட்டவருடைய நுண்ணறிவின் குறிப்பில் அடங்கியிருக்கிறது என்பதாம்.


தன்னேரிலாத தமிழ் - 85

ஆற்றும் துணையும் அறிவினை உள்ளடக்கி
ஊக்கம் உரையார் உணர்வு உடையார்ஊக்கம்
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்டது உலகு.” ---நாலடியார்.

அறிவுடையார், எடுத்த செயல் முடியுமளவு முயற்சி மேற்கொள்ளும் தமது மன வலிமையைப் பிறருக்கு வெளிப்படுத்த மாட்டார்கள்.பிறருடைய மன வலிமையை அவர் செயல்படும் வழிமுறைகளின் தன்மையாலேயே அறிந்து கொள்வர்.ஆதலால் உலகமெல்லாம் அப்படிப்பட்டவருடைய நுண்ணறிவின் குறிப்பில் அடங்கியிருக்கிறது என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக