திங்கள், 1 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 79


தன்னேரிலாத தமிழ் - 79

உலையா முயற்சி களைகணா ஊழின்
வலிசிந்தும் வன்மையும் உண்டே உலகறியப்
பால்முளை தின்று மறலி உயிர்குடித்த
கால் முனையே போலும் கரி.” நீதிநெறிவிளக்கம்

தளராத முயற்சியைப் பற்றுக்கோடாகக் கொண்டு ஊழின் பெரும் வலியைச் சிதைக்கின்ற ஆற்றலும் உண்டு ; உலகம் அறிய ஊழின் மூளையையே தின்று கூற்றுவனின் உயிரைப் பருகிய மார்க்கண்டேயன் என்னும் சிறுவனே அதற்குச் சான்று ஆவான். தளராத முயற்சி விதியை வெல்லும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக