ஞாயிறு, 14 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 91

அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம் என மலர்ந்த கையர் ஆகித்
தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்.”மலைபடுகடாம்.

அகன்ற நாட்டினையும் சுருங்கிய அறிவினையும் உடையவர்களாகித் தம்மை நாடி இரந்து வந்தவர்க்கு எதுவும் இல்லை எனக் கைவிரித்துக் கூறியும் தம் பெயரை உலகில் நிலைபெறச் செய்யாமல் தம் பெயர்  தம்முடன் அழியுமாறு சென்ற அரசர் பலராவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக