வியாழன், 11 ஜூன், 2020

தன்னேரிலாத தமிழ் - 88


தன்னேரிலாத தமிழ் - 88

முயலாது வைத்து முயன்று இன்மையாலே
உயலாகா ஊழ்த்திறத்த என்னார் மயலாயும்
ஊற்றமில் தூவிளக்கம் ஊழுண்மை காண்டும் என்று
ஏற்றார் எறிகால் முகத்து.” ---நீதிநெறிவிளக்கம்..

தன்னுடைய எதிர்கால ஊழின் நன்மை தீமைகளை விளக்கு வைத்துப் பார்க்க விரும்பும் ஒருவன், அசைந்துகொண்டே இருக்கும் தூய விளக்கை வீசுகின்ற காற்றுக்கு எதிரில் மயங்கியும் ஏற்ற மாட்டான். அப்படிப்பட்டவன் முயற்சியின்றி  இருந்து, தான் முயற்சி யின்றி இருப்பதினாலேயே ஊழ்வினை காரணமாகத் தனக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போகமாட்டா என்று முயற்சி செய்யாமலும் இருக்க மாட்டான். எனவே எல்லாம் விதிப்படியே நடக்கும் என்று கருதி அறிஞர்கள் முயலாமல் இருக்க மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக