தன்னேரிலாத
தமிழ்
-97
“செல்வத்தைப் பெற்றார் சினம் கடிந்து செவ்வியராய்
பல்கிளையும்
வாடாமல்
பாத்துண்டு
நல்ல
ஆம்
தானம்
மறவாத
தன்மையரேல்
அஃது
என்பார்
வானகத்து
வைப்பது
ஓர்
வைப்பு.”--- அறநெறிச்சாரம்.
பொருள் கிடைக்கப்
பெற்றவர்கள், சினம் தவிர்த்து,
காட்சிக்கு
எளியராய், தம்முடைய
உறவினர்கள்
வறுமையால்
துன்புறா
வண்ணம், அவர்களோடு
பகுத்துண்டு, நற்பயன்கள்
தருகின்ற
அறத்தினை
ஒருபோதும்
மறவாமல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், பின்பு தங்களுக்குப்
பயன்படும்படி
விண்ணுலகில்
சேமித்து
வைக்கின்ற
சேமிப்பு (புகழ்)
என்று சான்றோர்
கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக