ஞாயிறு, 3 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-206.

 

தன்னேரிலாத தமிழ்-206.

நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து

இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.” –குறுந்தொகை, 6.

நள்ளிரவின் நடுக்கூறாகிய யாமப் பொழுது ; நள் என்ற ஓசை உடையதாக உள்ளது; மக்கள் பேச்சொழிந்து வெறுப்பின்றி இனிமையாக உறங்குகின்றனர்; அகன்றஇடத்தையுடைய உலகில் உள்ள உயிர்களும் இனிது துயில்கின்றன ; உறுதியாக யான் ஒருத்தியே உறக்கமின்றித் தவிக்கிறேன். –தலைவி, தோழிக்குக் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக