வியாழன், 14 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-215.

 

தன்னேரிலாத தமிழ்-215.

மண்முழா மறப்ப பண்யாழ் மறப்ப

இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப

கரும்புஆர் தேறல் சுற்றம் மறப்ப

உழவர் ஓதை மறப்ப விழவும்

அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப

உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து

இருசுடர் தம்முள் நோக்கி…..” ---புறநானூறு, 65.

முரசின் கண்ணமைந்த பகுதியில் மார்ச்சனை இடுதல் மறந்து,  யாழ் இசையெழுப்புதலினின்று மறந்து, பெரிய இடமுடைய பானையும் பாலின்மையல் கவிழ்ந்து, நெய் கடையும் ஓசையை மறந்து,  தம்முடைய உறவினர்கள் மது உண்ணுதலை மறக்க,  உழவர் உழவுத்தொழில் செய்யாது நீங்க,   அகன்ற தெருவுடைய சிற்றூர்கள் விழாக்களை மறந்து, தன் நாடு இவ்வாறு ஆகுமாறு மன்னன்  பெருஞ்சேரலாதன் வடக்கிருந்தான்.

 

1 கருத்து:

  1. பாலின்மையல் கவிழ்ந்து என்பதை நான் பாலின்மையால் என்று வாசித்துவிட்டேன் ஐயா.
    வடக்கிருத்தல் பற்றிய வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு