புதன், 6 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-208.

 

தன்னேரிலாத தமிழ்-208.

இன் துணை நீ நீப்ப இரவினுள் துணையாகி

தன் துணைப் பிரிந்து அயாஅம் தனிக்குருகு உசாவுமே

ஒண்சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும்

நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு.” ---கலித்தொகை, 121.

இனிய துணையாகிய நீ, இவளைவிட்டு நீங்கினை ; ஒளி பொருந்திய கதிர்களை உடைய ஞாயிற்றினது மிக்க ஒளியான், தன் ஒளி கெடுகின்ற உச்சிக்காலத்து மதிபோல், ஒளிநலம் அழிந்த முகத்தினை உடையாளுக்குத் தன் துணையைப் பிரிந்து வாடும் தனிக்குருகு நாரைபேடுதான் இரவினுள் இவளுக்கு உற்ற துணையாகி, இவள் நிலைபற்றிக் கேட்கும். –தோழி கூற்று.

1 கருத்து: