ஞாயிறு, 17 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-218.

 

தன்னேரிலாத தமிழ்-218.

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்

பரந்துபட்ட வியல் ஞாலம்

தாளின் தந்து தம் புகழ் நிறீஇ

ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய

பெருமைத்தாக நின் ஆயுள் தானே.” ---புறநானூறு, 18..

முழங்கும் கடல் முழுதும் வளைத்த பரந்தகன்ற உலகத்தைத் தம் முயற்சியால் கொண்டு, தம் புகழை உலகில் நிலைக்கச் செய்து, தாமே ஆண்ட வலியோர் மரபில் வந்தவனே..!  ( தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்)   ஒன்றைப் பத்தின் மடங்குகளாக அடுக்கிய, கோடியைக் கடை எண்ணாக இருத்திய, சங்கு முதலாகிய பேரெண்ணினை உடைத்தாக நின் வாழ்நாள் பெருமைஅடைவதாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக