தன்னேரிலாத
தமிழ்-210.
“துனிநீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல்
கண்ணுறு விழுமம் கைபோல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்
இன்னாது அன்றே அவர் இல் ஊரே.” ---நற்றிணை, 216.
தலைவர் ஊடலைத்தீர்த்துக் கூடியின்புற என்னிடன் வாரார் ஆயினும்
முன்பு, பலமுறை அவர் மேனியை நோக்கி மகிழ்ந்துள்ளேன். அவ்வாறு அவருடைய அழகைக்கண்டு,
உயிருடன் வாழ்தல் இனியதாகும். இப்பொழுது அங்ஙனம் காண்கிலேனே
; கண்ணில் விழும் நுண்ணிய துகளையும் கை விலக்குவதைப்போல, நாம் கொண்ட துன்பத்தைத் தலைவர் நீக்காமல் போயினும் அவர் இல்லாத ஊர் துன்பத்தைத்
தருகின்றது. இவ்வூரால் நேரும் பயன்தான் என்ன..? ஏதுமில்லையே..! –தலைவி, பாங்காயினார்
கேட்பக் கூறியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக