தன்னேரிலாத
தமிழ்-223.
“நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்
நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என
காண்தகு மொய்ம்ப காட்டினை…….” –புறநானூறு, 43.
வேந்தே..! ( சோழன் மாவளத்தான்) உன் மீது நான் பழி கூறிப் பிழை செய்ய ; நீயோ,
என்னைவிடப்
பிழை செய்தவன்
போல் மிகவும் நாணமடைந்தாய் ; இவ்வாறு தமக்குப்
பிழை செய்தோரைப்
பொறுத்தருளும்
தலைமை, இக்குலத்தில்
பிறந்தவர்க்கு
எளிமையாகக்
காணப்படும்
பண்பாகும் ; இப்பண்பினை இன்று யான் காணுமாறு
வெளிப்படுத்தினை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக