தன்னேரிலாத
தமிழ்-226.
“ வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை
யாதும்
திரியாதாம்
ஆங்கே
இனம்
தீது
எனினும்
இயல்புடையார்
கேண்மை
மனம்
தீதாம்
பக்கம்
அரிது.” –நாலடியார், 244.
வேம்பின்
இலைக்குள்
பொதித்து
வைக்கப் பெற்றுப்
பழுத்தாலும்
வாழைப்பழம்
தன் இனிய சுவையில்
சிறிதும்
மாறாது அமையும் . அதுபோல் தான் சேர்ந்து
பழகும் இனம் தீயதாக இருந்தால்கூட, நல்லியல்பு
உடையார் உறவு, மனம் தீயதாக மாறும் வகை அரிதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக