வெள்ளி, 22 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-221.

 

தன்னேரிலாத தமிழ்-221.

நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச் 

செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை

உவரா ஈகை துவரை ஆண்டு

நாற்பத்தொன்பது வழிமுறை வந்த

 வேளிருள் வேளே  விறல்போர் அண்ணல். “ –புறநானூறு, 201.

நீயே, ( இருங்கோவேள்) வடபுலத்து முனிவனுடைய ஓமகுண்டத்தில் தோன்றிச் செம்பாற் புனைந்து செய்தது போன்ற நீண்ட துவராபதி   

 ( துவரைதுவார சமுத்திரம்) என்னும் நாட்டை ஆண்ட வெறுப்பற்ற கொடையினை உடைய நாற்பத்தொன்பது தலைமுறைகளைக் கொண்ட வேளிர்களுள் ஒருவன்,  வெற்றி பொருந்திய போரையுடைய தலைவனே…!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக