சனி, 16 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-217.

 

தன்னேரிலாத தமிழ்-217.

கான் உறை வாழ்க்கை கதநாய் வேட்டுவன்

மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்

தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய

ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்

குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்

முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்.” ---புறநானூறு, 33.

வேட்டை நாயை உடைய வேட்டுவன், காட்டில் வாழும் வாழ்க்கையன் ; அவன் மான் தசையைக் கொண்ட கடகப் பெட்டியையும் ஆய்மகள் தயிர் கொண்டுவந்து தந்த பானையையும் உடையவன் ; அவனுக்கு ஏரினால் உழுது வாழும் உழவர்தம் பெரிய வீட்டில் உள்ள மகளிர், குளத்திற்குக் கீழாக விளைந்த களத்திலிருந்து பெற்ற வெண்ணெல்லை முகந்து தருவர் ; அதனைப் பெற்றவனாய் மகிழ்ந்து தன் இருப்பிடத்திற்கு மீள்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக