செவ்வாய், 12 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-213.

 

தன்னேரிலாத தமிழ்-213.

விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கைப்

பரிதிஅம் செல்வம் பொதுமை இன்றி

நனவின் இயன்றது ஆயினும் கங்குல்

கனவின் அற்று அதன் கழிவே…”அகநானூறு, 379..

விரிந்த அலைகளை உடைய மண்திணிந்த இவ்வுலகம் முழுவதும் உருண்டோடிடும் செல்வமானது, யாவர்க்கும் பொதுமையாக இல்லையாதலால், அச்செல்வம் உண்மையாகவே கை கூடியதாயினும் அதன் போக்கு இரவில் தோன்றி மறையும் கனவைப் போன்றதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக