வியாழன், 7 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-209.

 

தன்னேரிலாத தமிழ்-209.

கோடு உயர் பல்மலை இறந்தனர் ஆயினும்

நீட விடுமோ மற்றே நீடு நினைந்து

துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி

உடைத்தெழு வெள்ளம் ஆகிய கண்ணே.” –ஐங்குறுநூறு, 358.

தோழி..!  நம் காதலர் கோடு உயர்ந்த பல மலைகளையும் கடந்து பொருளீட்டச் சென்றாராயினும் அவர் விரைந்து வருகுவர். நீ அவரையே எப்பொழுதும் நினைத்தலால், நீ, துடைக்க துடைக்க நில்லாது, அடைக்குந்தொறும் அணையை உடைத்துக்கொண்டு  வரும் பெருவெள்ளம் போலப் பெருகும் நின் கண்ணீர், அவரை மேலும் அவர் சென்ற நாட்டில் தங்கவிடுமோ..? –தோழி, தலைவிக்குச் சொல்லியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக