ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –428: பெண்ணின்பமே பேரின்பம், திருமங்கை ஆழ்வார்.

 

தன்னேரிலாத தமிழ் –428: பெண்ணின்பமே பேரின்பம், திருமங்கை ஆழ்வார்.

துறவறத்தினும் இவ்வுலகத்துப் பெண்ணின்பமே பெரிதென்னும் கருத்தைப் பெரிய திருமடலில் திருமங்கையாழ்வார்… இன்பமே சிறந்தது என்றும் இதைவிட்டுப் பேரின்பம் விரும்பிச் சென்று அதை அடைந்தவர்கள் யாரும் இலர் என்றார்.

“ தொன்னெறிக்கட் சென்றார் எனப்படும் சொல்லால்

இன்னதோர் காலத் தினையா ரிதுபெற்றார்

என்னவும் கேட்டறிவதில்லை – உளதென்னில்

மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள்

அன்னதோர் இல்லினூடுபோய் வீடென்னும்

தொன்னெறிகட் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே

அன்னதே பேசும் அறிவில் சிறுமனத்து- ஆங்கு

அன்னவரைக் கற்பிப்போம் யாமே…”.-15.

(தொல் நெறிக்  கண் ; காலத்து இனையார் இது; நல் நடுவுள்; இல்லினுள் ஊடு போய்; அறிவு இல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக