தன்னேரிலாத
தமிழ் –436: குறள்
கூறும் ”பொருள்” பெறுக
476
நுனிக்கொம்பர்
ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி
ஆகி விடும்.
ஒரு மரக்கிளையின் நுனிக்கு ஏறிய பின்னும் ஊக்கம் கொண்டு,
மேலும் மேலேற முயற்சித்தால், அவ்வூக்கம்
உயிருக்கு
இறுதியைத்தான்
கொடுக்கும்.
வலிமை அறியாமல்
கொள்ளும்
ஊக்கம் கேடு தரும்.
“
சிறுமுயற்சி செய்து ஆங்கு உறுபயன் கொள்ளப்
பெறும்
எனில் தாழ்வரோ தாழார் அறன் அல்ல
எண்மைய வாயினும் கைவிட்டு அரிது எனினும்
ஒண்மையின் தீர்ந்து ஒழுகலார்.” -நீதிநெறிவிளக்கம், 70.
செய்து முடிப்பதற்கு எளிதாக இருந்தாலும் அறநெறிக்குப் புறம்பானவற்றைச் செய்தலை ஒழித்து, செய்வதற்கு அரியதாக இருந்தாலும் அறநெறியிலிருந்து பிறழாமல் ஒழுகிப் பயன் அடைவோர் எளிய சிறு முயற்சி செய்து, மிகுந்த பயனை அடைய முடியும் என்றால் அம்முயற்சியை மேற்கொள்ளத் தயங்க மாட்டார்கள் . எனவே, மேலோர்
நன்மைதரும் செயல்களை முயன்று முடிப்பர், பின்
வாங்கார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக