தன்னேரிலாத
தமிழ் –440: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
495
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
முதலை,
தனக்கு உரிய இடமாகிய ஆழமான நீரில் இருந்தால், தன்னைவிட வலிமையான
விலங்கையும்
வேட்டையாடி
வெல்லும்.
அதுவே,
தன்னிடத்தை
விட்டுத்
தரைக்கு வருமானால்,
அதைவிட வலிமை குறைந்த பிற உயிரினங்கள்
அதனை எளிதாக வென்றுவிடும்.
”தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறுகண்
மூங்கில்
கோலுக்கு
அஞ்சுமே.”
–வெற்றிவேற்கை, 60.
அச்சம் இல்லாத யானை, உருவத்தால்
பெரிதாயினும் பாகன் கையிலுள்ள கணுக்கள்
உடைய மூங்கில்
கோலுக்கு
அஞ்சி நடக்கும். அதுபோல வலிமையும்
பெருமையும்
உடையவர்கள்,
தம்மை ஆள்வோர்க்குப்
பணிந்து நடப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக