தன்னேரிலாத தமிழ் –430: செம்மொழித் தமிழ்….!
”
கன்னட மொழியில் இலக்கியத்தரமுள்ள முதல் படைப்பான கவிராஜ மார்க, ஒன்பதாவது நீர்றாண்டைச்
சேர்ந்தது. தஎலுங்கில் நன்னய்யாவின் மகாபாரதம் பதினொராவது நூற்றாண்டில் படைக்கப்பட்டது.
மலையாளம் ஒன்பதாவது நூற்றாண்டில் பழந்தமிழில்லிருந்து பிரிந்தது. மலையாள மொழியில் குறிப்பிடத்தக்க
முதல் இலக்கியமான இராம சரிதம் பதின்மூன்றாம் நுற்றாண்டைச் சேர்ந்தது. வட இந்தியா, வடகிழக்கு
இந்தியா ஆகிய பகுதிகளை எடுத்துக்கொண்டாலும் ஏழாவது நூற்றாண்டுக்கு முந்திய இலக்கியங்கள்
இல்லை. மராட்டிய மொழியில் முதல் இலக்கிய நூல் ஏழாவது அல்லது எட்டாவது நுற்றாண்டில்தான்
வந்துள்ளது. அஸ்ஸாமிய மொழியில் எட்டாவது நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாவது நூற்றாண்டிற்கும்
இடையில் வந்த காமரூப காரர்ய என்ற நூல் தான் முதல் நூள். வங்க மொழியில் இலக்கியப் படைப்பு பன்னிரண்டாவது நூற்றாண்டுக்குப் பிந்தியதுதான்.
இந்தியைப் பொறுத்தவரை பதினைந்தாவது நூர்றாண்டில்தான் இலக்கியமே தோன்றியிருக்கிறது.
மேலும் தமிழ், வடமொழி தவிர்த்த மற்ற இந்திய மொழிகளின் கூறுபாடுகளில் அவை செவ்வியல்
தரம் வாய்ந்தவையா என்பதும் வேறு.கேள்வி.” ஜார்ஜ் எல். ஹார்ட். ( டாக்டர் வா. செ. குழந்தைசாமி,
உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ், ப.78.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக