தன்னேரிலாத
தமிழ் –438: குறள்
கூறும் ”பொருள்” பெறுக
481
பகல்வெல்லும்
கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு
வேண்டும் பொழுது.
இரவில் வேட்டையாடும்
வலிமையுள்ள
கோட்டானைப்
பகல் பொழுதில்
காக்கை வென்றுவிடும். அதுபோல, பகையை வெல்லக் கருதும் வேந்தன் காலம் அறிந்து களத்தில்
இறங்க வேண்டும்.
“
காலம்அறிந்து ஆங்குஇடம் அறிந்துசெய் வினையின்
மூலம்அறிந்து விளைவுஅறிந்து மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும். ” –நீதிநெறிவிளக்கம், 52.
ஒரு செயலைச் செய்வதற்கான
காலம், இடம், காரணம் ஆகியவற்றையும் அச்செயலைச்
செய்வதினால் ஏற்படும் பயனையும் அறிந்து, மேலும் தாம் ஆராய வேண்டியவற்றைச் செம்மையாக ஆராய்ந்து, தம் முயற்சிக்குத் துணை
ஆவார் வலிமையையும் அறிந்து, அதன் பின்னரே செயலில் இறங்க வேண்டும். எனவே, காலம் , இடம், கருவி முதலியவற்றைக் கருத்தில்
கொண்டே ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக