தன்னேரிலாத தமிழ் –429: பெருமழைப்
புலவர் உரைவளம்.
"தலைவன்
வண்டுகட்குச் செவியறிவின்மயறிந்தும் அவை பேதுறும் என்று அஞ்சினான் என்றது தலவனது அன்புமடம்
தோழி கூறியவாறாம் என்னை? உடாஅ போராஅ தாதலறிந்தும் மயிலுக்குப் படாஅம் ஈந்த கொடைமடம்
போன்று இம்மடமும் தலைவனுடைய அன்புப் பெருக்கத்தையே உணர்த்துவதாம் என்க. இனி, இது தோழி
தலைவியை ஆர்றுதற்பொருட்டுக் கூறுகின்ற படைத்துமொழிக் கிளவி யாகலான் அவள் தன் பேதைமையால்
இங்ஙனம் கூறினாள் எனினுமாம்.
நச்சினார்க்கினியர்
சிந்தாமணி உரையில் இச்செய்யுளில் வரும் பூத்த…….தேரன்… என்பதனை எடுத்துக்காட்டி, வண்டிற்குச்
செவியறிவுண்டென மயங்கிக் கூறுவாராயினர். (குறுங்குடி மருதனார், அகநானூறு:4.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக