தன்னேரிலாத தமிழ் –442.
ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவியிருந்த
தமிழர்கள் உலகிற்கு வழங்கிய கொடை….!
The Indians introduced ZERO into mathematics. This enabled
them to elaborate a simple and convenient
way of counting by means of ten number symbols. Today, almost the whole
world uses the system. Europeans call the numbers Arabic because they learned
them from the Arabs, but the Arabs called them Idian. –F.Korovkin, History of the Ancient World, P.84.
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே சுழியைக் குறித்துள்ளனர், பரிபாடல் சுழியைப்
”பாழ்” என்று குறித்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டில் சுன்னம் என்னும் குறியானது அரேபியர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதெனினும்
அரேபிய எண் முறையில் 0=5 என்றிருந்தது. சுழியைக்குறிக்க அவர்கள் ஒரு புள்ளியை மட்டுமே (Zero is simply a
dot) பயன்படுத்தினர். 0 இக்குறியீடும் இந்தியாவிலிருந்து
அரேபியா வழியாக ஐரோப்பா சென்றடைந்தது.
தமிழ் எழுத்துகள் பலவும் சுழி உடையனவாக
இருக்கின்றன. காலப்போக்கில் நிகழும் எழுத்து வரிவடிவ
வளர்ச்சி( மாற்றம்) தமிழிலும் கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் தொடங்கி இன்றைய வடிவம் நோக்கி
வளர்ச்சி அடைந்தது. தமிழில்
பத்து என்பதைக் குறிக்கும் தொன்மைக் குறியீடு “ஒன்றும் சுழியும்
(ய-10) இணைந்ததைப்போல இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக