செவ்வாய், 12 ஏப்ரல், 2022

தன்னேரிலாத தமிழ் –432: தொல்காப்பியம்- இடைச்செருகல்

 

தன்னேரிலாத தமிழ் –432: தொல்காப்பியம்- இடைச்செருகல்

மரபியலில் விலங்கினங்களின் குட்டி, ஆண், பெண் இவை போன்றவற்றை வழங்கும் மரபுச் சொற்களக் கூறிக்கொண்டு வந்த தொல்காப்பியர் சடுதியில்நூலே கரகம்எனத் தொடங்கி, அந்தணர், அரசர், வணிகளைப்பற்றிக் கூறிரானாரெனல் சிறிதும் பொருந்தாது. அவர்களுக்குரிய தொழில்களைக் கூறியபின் உடனே,’ புறக்காழனவே புல்லென மொழிபஎன மரஞ் செடிகளைப் பற்றிக் கூறினார் எனலும் பொருத்தமாகக் காணவில்லை. மரபியலில் 71-க்கும் 85-க்கும் இடையே உள்ள சூத்திரங்கள் பெரும்பாலும் இடைச்செருகல் என்று அனுமானிக்கத்தக்கன.  

 “வேளாண் மாந்தர்க்குக் குழுதூணல்ல தில்லை” என அறுதியிட்டுக் கூறியபின் அவர்க்குரியனவாகச் சிலவற்றைப் பின்னும் கூறுதல் முறையாகாது. ஆகவே அச்சூத்திரங்கள் காலத்துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப்பட்டனவாதல் வேண்டும். வைசியன் என்னும் சொல் சங்க நூல்களிற் காணப்படவில்லை. அச்சொல் வழக்கு பிற்காலத்தது. “ வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” என்னும் சூத்திரம் மிகப் பிற்காலத்தது என்று நன்றாகக் கூறலாம். செய்யுளியலில் 167, 168,169, 170, 171, 172  முதலிய சூத்திரங்கள் இடைச்செருகலோவெனஆராய்தற்குரியன. மரபியலில் சூத்திரம் 92-க்குப் பின்னுள்ள பகுதிகளும் அப்படியே.” –ந.சி. கந்தையா, தமிழர் சரித்திரம், ப.88.

2 கருத்துகள்: