தன்னேரிலாத தமிழ் –426 : வடமொழிக் கலப்பு, பரிதிமாற்
கலைஞர்
“வடமொழியாளர்
தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான்
புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்ம நூற் பயிற்சி மிக்குடையராயும், கலையுணர்ச்சி சான்றவராயுமிருந்தமை
பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர். தமிழர்களிடத்தில்லாதிருந்த
“அந்தணர், அரசர், வணிகர், வேளாளர்” என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர்.
முற்படைப்பதினில்வேறாகிய முறைமை போல்
நால்வகைச்
சாதியுந் நாட்டினீர் நட்டினீர்” என்று ஆரியரை நோக்கி முழங்குங் ‘கபிலரகவ லையுங் காண்க.
இன்னும் அவர்தம் புந்தி நலங்காட்டித் தமிழரசர்களிடம் அமைச்சர்களெனவும் மேலதிகார பிரபுக்களெனவும்
அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர்
அறியு முன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும்
காட்டினர்.” தமிழ்மொழியின் வரலாறு, ப.8.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக