தன்னேரிலாத
தமிழ் –439: குறள்
கூறும் ”பொருள்” பெறுக
490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
அசைவற்று
உறு மீன் வருமளவும்
காத்திருக்கும்
கொக்கைப்
போலக் காலம் கனியும்வரை
காத்திருந்து, உறு மீனைக் கொத்தி எடுக்கும்
கொக்கினைப்
போலத் தக்க நேரத்தில்
பகையை அழிக்க வேண்டும்.
“அடக்கம் உடையார் அறிவு இலர் என்று எண்ணிக்
கடக்கக்
கருதவும்
வேண்டா – மடைத்தலையில்
ஓடு
மீன்
ஓட
உறுமீன்
வரும்
அளவும்
வாடி
இருக்குமாம்
கொக்கு.”
–வாக்குண்டாம், 16.
கொக்கு, நீரோடும்
மடை அருகில் நின்று,
நீரோடு செல்லும்
சிறிய மீன்களை விட்டுவிட்டுப்
பெரிய மீன் வரும்வரை
காத்திருக்கும். அதுபோல, அடக்கம் உடையவர்களை அறிவு இல்லாதவர்கள் என்று எண்ணி, அவர்களை
வெல்ல நினைக்கக்
கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக