வியாழன், 4 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –484: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –484: குறள் கூறும்பொருள்பெறுக.

 

646

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.


அவையோர் விருப்பத்தோடு கேட்குமாறு சுவைபடக் கருத்துரைத்து, கருத்துரையின் வன்மை மென்மைகளைப் பிறர் சொல்லும்போது, அவற்றை ஆராய்ந்து தெளிதல் மாசற்ற நல்லோரின் கொள்கையாகும்.


நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து

வல்லார் ஆயினும் புறம் மறைத்துச் சென்றோரைச்

சொல்லிக் காட்டிச் சோர்வு இன்றி விளக்கி

நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கம்..”மலைபடுகடாம், 77 – 80.


தாம் கற்றவற்றை வெளிப்படுத்தும் நாவன்மை மிக்க அறிவுடையோர் பலர் கூடிய அவைக்களத்தில், தாம் கற்றவற்றைப் பிறர் மனங்கொளக் கூறாரிடத்தும் அவர்தம் இயலாமையை மறைத்து,  இகழாது, எல்லோர் மனங்களிலும் பொருந்துமாறு பொருளுரைத்து, அவர்களை நன்றாக நடத்தும் இயல்பினராகிய,  உயரிய ஒழுக்கமுடைய சான்றோர் சுற்றம் சூழ விளங்குவது நன்னன் அவைக்களம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக