தன்னேரிலாத
தமிழ் –492: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
667
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
உருண்டோடும்
பெரிய தேருக்கு
ஆதாரமாக இருப்பது
சிறிய அச்சாணியே. அதுபோலச் செயல்திறன்
மிக்கோர்
பலர் உளர். ஒருவரின் உருவத்தைக்கொண்டு
எவரையும்
இகழ்ந்து
விடக்கூடாது.
”கர்ப்பூரம் போலக் கடல் உப்பு இருந்தாலும்
கர்ப்பூரம்
ஆகுமோ
கடல்
உப்பு
பொற்பு
ஊரும்
புண்ணியரைப்
போல்
இருந்தாலும்
புல்லியர்
தாம்
புண்ணியர்
ஆவாரோ
புகல்.”—நீதிவெண்பா, 25.
வடிவத்தில்
கர்ப்பூரத்தைப்
போல் கடல் உப்பு இருந்தாலும்
கர்ப்பூரத்தின்
தன்மைகளைக்
கடல் உப்பு ஒருபோதும் பெறமுடியாது. அதுபோல, நல்வினையாளர்களைப்
போல் தோற்றப் பொலிவினைப்
பெற்றிருந்தாலும்
தீவினையாளர்கள்
நல்வினையாளர்களாகிவிட
முடியாது. எனவே தோற்றத்தைக்
கொண்டு எவரையும்
மதிப்பிடலாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக