தன்னேரிலாத
தமிழ் –485: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
648
விரைந்து தொழில்கேட்கும்
ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
மேடை நெறியறிந்து, தான் பேசக்கருதிய
பொருள் பிறழாது, கேட்போர்
மனங்கொள,
இனிய உரையாற்ற
வல்ல ஒருனைப்பெற்றால், அவன் சொல்லை, உலகமே விரைந்து
ஏற்று நடக்கும்.
“
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந்நாடு
வேற்று நாடு ஆகா தமவே ஆம்…” –பழமொழி, 55.
ஆன்ற கல்விஅறிவுடையார்தம்
சொல்,
செல்லாத நாடு, நான்கு திசைகளிலும்
இல்லை; அந்நாடுகள்
வேற்று நாடுகள் ஆகா ; தம்முடைய
நாடுகளேயாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக