தன்னேரிலாத
தமிழ் –493: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
செய்யத் துணிந்த செயலில் துன்பம் நேரிடினும்
கலங்காது,
துணிவுடன்
செயலாற்றி
இன்புறுதல்
வேண்டும்.
“ நரம்பு எழுந்து நல்கூர்ந்தார் ஆயினும்
சான்றோர்
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார்-உரம் கவறா
உள்ளம் எனும் நாரினார் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பாலவை.” ---நாலடியார், 153.
நரம்புகள் தளர்ந்து வறுமையுற்றாலும் சான்றோர் தம் எல்லை கடந்து எவரிடத்தும்
இரந்துண்டு வாழும் குற்றத்தைக் கைக்கொண்டு
போகார். அறிவைக் கவறாக வைத்து, முயற்சி என்னும் நாரினாலே மனத்தைக் கட்டித் தம்மிடம் இருக்கின்ற பொருளைக் கொண்டு,
செய்யத்தக்க செயல்களைச் செவ்வனே செய்து முடிப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக