தன்னேரிலாத
தமிழ் –491: குறள்
கூறும் ”பொருள்” பெறுக.
665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம்
வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
செயல்திறனால்
சிறப்பு எய்திப் பலராலும்
புகழப்பெற்ற
அமைச்சரின்
செயலாற்றல்
, அரசனுக்கு
ஆக்கமும்
புகழும் உண்டாக்குவதால் அவரை எல்லோரும்
மதித்துப்
போற்றுவர்.
“நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும்
அறனும் ஒழியாது காத்துப்
பழிஒரீஇ
உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்.”
–மதுரைக்காஞ்சி, 498 – 501.
அமைச்சர்
பெருமக்கள், நன்மை தீமைகளை ஆராய்ந்து
தீமைகளை விலக்குவர்; அன்பும் அறமும் எக்காலத்தும்
தம்மைவிட்டு
நீங்காது
பாதுகாப்பர்; பழியிலிருந்து
நீங்கி உயர்ந்து
விளங்குவர் ; எங்கும் பரவிய புகழால் நிறைந்தவர் ; செம்மை சான்றவர்; அரசனால் ( தலையாலங்கானத்துச்
செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்) காவிதி பட்டம் பெற்றவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக