புதன், 3 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –483: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –483: குறள் கூறும்பொருள்பெறுக.

 

642

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.


ஒருவனுக்கு, மேன்மையும் கேடும், சொல்லும் சொல்லால் வந்துசேர்வதால், சொற்குற்றம் வாராமல் நாவைக் காத்துக்கொள்ள வேண்டும்.


ஈகை அரிது எனினும் இன்சொலினும் நல் கூர்தல்

கொடிது அம்மா நா கொன்று

தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின் மற்று

ஆ ஆ இவரென் செய்வார். – நீதிநெறிவிளக்கம், 68.


ஒருவன் பிறருக்குப் பொருள் எதையும் கொடுக்கவில்லை என்றாலும் இனிய சொற்களைக் கூறுவதிலும் வறுமையைப் பெறுதல் மிகமிகக் கொடுமையாம் .ஏனெனில், தீவினையாளனாகிய கம்மாளன் அவர்களுடைய நாவினை முடக்கி , வாய்திறந்து பேச முடியாதபடி வாய்ப்பூட்டுப் போட்டு விட்டால், அப்போது அவர்கள் விரும்பினாலும் இனிய சொற்களைக் கூறமுடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக