திங்கள், 8 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –487: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –487: குறள் கூறும்பொருள்பெறுக.

 

651

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்

வேண்டிய எல்லாம் தரும்.


 ஒரு செயலைச் செய்வதற்கு அமைந்த, துணைநலம் செல்வம் மட்டுமே தரும். ஆனால், செய்யும் செயலின்கண் கொண்ட வினைத் தூய்மை விரும்பிய எல்லாவற்றையும் தரும்.


செய்யும் ஒரு கருமம் தேர்ந்து புரிவது அன்றிச்

செய்யின் மனத்தாபம் சேருமே செய்ய ஒரு

நல்குடியைக் காத்த நகுலனை முன்கொன்ற மறைப்

பொற்கொடியைச் சேர்துயரம் போல். ---நீதிவெண்பா, 17.


 நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து தெளிந்த பின்னரே, எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆராய்ந்து பார்க்காமல் தன் குழந்தையைப் பாதுகாத்த கீரிப்பிள்ளையைக் கொன்றுவிட்டுப் பின்னால் வருந்திய பார்ப்பனப் பெண்ணைப் போல் நினைந்து நினைந்து வருந்த வேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக